லப்பர் பந்து: நகைச்சுவை – குணச்சித்திரம் | டி எஸ் கே
சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே. சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான நகைச்சுவை நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ளார்.
செப்டம்பர் 20 ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள், வெப்சீரிஸ் குறித்தும், “’லப்பர் பந்து’ நான் நடிக்கும் 18 ஆவது படம். ஆனாலும் இந்தப் படத்தில் நடித்த போது இதுதான் எனது முதல் படம் என்பது போல உணர்ந்தேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அனுபவங்கள் கிடைத்தன. இயக்குநர் தமிழரசன் நடிப்பு குறித்து மெனக்கெட்டு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு?' ரியாலிட்டி ஷோவில் ஒரு டைட்டில் வின...