
PRK Productions – புதிய தயாரிப்பு நிறுவனம்
தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் துவங்கிய இந்தப் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ்த் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு. சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு. மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு. குமார், நடிகர் திரு. யோகிபாபு, இயக்குநர் திரு. சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர் திரு இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வ...















