32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 38 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 38)
இது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம் சினிமா

இது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம்

ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இது என் காதல் புத்தகம்’. அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ, இப்படத்தின் கதாநாயகியான தேவயாணி கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் […]

18/08/2019 Dinesh R
கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக சினிமா

கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்துவிட்ட நிலையில், 90’ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டங்கள் எல்லாம் பழங்கதையாகி விட்டன. அதிலொன்று பாட்டுப்புத்தகம். அவை இன்று பரிணாம வளர்ச்சியடைந்து, பாடல் வரிகளுடன் கூடிய காணொளியாக (Lyrical video) உருமாற்றம் கொண்டுள்ளது. அப்பொற்காலத்திற்கு மீண்டும் செல்வது சாத்தியமில்லை எனினும், கோமாளி படக்குழு தங்கள் படத்துக்கும் பாட்டுப் புத்தகத்தை உருவாக்கி, ரசிகர்களை 90 களின் இனிய நினைவுகளில் திளைக்க வைக்க முடிவு செய்துள்ளனர். “ட்ரெய்லரை, அனைவரும் அதில் பொதிந்துள்ள ஜாலியான நகைச்சுவைக்காக விரும்புவார்கள் என நினைத்தோம். […]

14/08/2019 Dinesh R
நானும் சிங்கிள் தான் – காதல் படம் சினிமா

நானும் சிங்கிள் தான் – காதல் படம்

THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. தினேஷ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தீப்தி திவேஸும் நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் லண்டன், ஐரோப்பா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. “இது முழுக்க முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் கோபி. […]

12/08/2019 Dinesh R
எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M. சினிமா

எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது. M.G.R. பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமனஅ அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. என் காதல் ராணி என்னைத் தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா என்று ஹரிசரண் பாடிய […]

12/08/2019 Dinesh R
கடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம் சினிமா

கடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் படம் ‘கடமான் பாறை’. இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா […]

12/08/2019 Dinesh R
சமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில் சினிமா

சமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபேக்டரி தயாரிபில், பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது. ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார். வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்தக் காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை […]

12/08/2019 Dinesh R
விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன் சினிமா

விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்

கதையின் தன்மையையும், திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் கௌரவ் நாராயணன். எதார்த்த வாழ்வியலுக்குத் “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்குச் “சிகரம் தோடு”, தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” எனப் படத்திற்குப் படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குநர் கௌரவ் நாராயணன். இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தித் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். விரைவில் புதிய […]

12/08/2019 Dinesh R
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை

  ஒரு திரைப்படம் உருவாக மிகவும் முக்கியமான காரணமாக இருப்பவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வெகு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு விழாவிலும், சரியான அங்கீகாரமும் அடையாளமும் கிடைப்பதில்லை. இதனைக் கலையும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், FM சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, எந்தவொரு பாடல் ஒலிபரப்புவதற்கு முன்பும், அந்தத் திரைப்படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லித்தான் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்று […]

10/08/2019 Dinesh R
45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் சினிமா

45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களைச் சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தியாக […]

08/08/2019 Dinesh R
ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம் சினிமா

ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம்

துருவங்கள் 16 படத்தின் மிகப் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் – “ஆபரேஷன் அரபைமா. பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர் ப்ராஷ். இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாகப் பணி புரிந்தவர் […]

07/08/2019 Dinesh R
‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் சினிமா

‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்

அறிமுக இயக்குநர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்த்திபன். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குநர் என்றும் பேர் போட்டுக் கொண்டார். மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து, மீண்டும் […]

07/08/2019 Dinesh R
சலசலக்கும் சண்முக பாண்டியன் சினிமா

சலசலக்கும் சண்முக பாண்டியன்

கிராமப்புறப் பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்குப் படமான ‘மித்ரன்’ படத்திற்காகப் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு, ‘சல சல’ என்ற துள்ளலான ஒரு பாடலைப் படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. பொதுவாகப் போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்ட பின்னணியையும் கொண்டிருக்கும். அதில் துள்ளலான கொண்டாட்ட பாடல் எப்படி வைக்க முடியும்? அதைப் பற்றி இயக்குநர் ஜி.பூபாலன் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே, […]

30/07/2019 Dinesh R
நிகிஷா பட்டேலின் லட்சியம் சினிமா

நிகிஷா பட்டேலின் லட்சியம்

“பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தைத் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபஎஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது . இப்படத்தைத் தவிர எழில் சார் இயக்கியுள்ள, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும், இயக்குநர் கஸ்தூரி […]

29/07/2019 Dinesh R
மயூரன் – உன்னைக் காப்பவன் சினிமா

மயூரன் – உன்னைக் காப்பவன்

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு […]

29/07/2019 Dinesh R
வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாகிறார் சூரி சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாகிறார் சூரி

விண்னைத்தாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாகத் தயாரித்த எல்ரெட் குமார், தற்போது எதார்த்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் […]

27/07/2019 Dinesh R