Shadow

Songs

அம்மண அம்மண தேசத்தில – பாடல்

அம்மண அம்மண தேசத்தில – பாடல்

Songs, காணொளிகள், சினிமா
“கொலை விளையும் நிலம் - ஆவணப்படத்தின் மூலம் சமீபத்தில் தனுஷ் அவர்கள் கரங்களால் 125 பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி கிடைத்திருக்கிறது. இன்னும் பலர் உதவிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். அத்தனைக்கும் காரணம் ஊடக நண்பர்கள் தான். ஓர் ஆவணப்படம் தானே என்பதைத் தாண்டி அது பேசிய விஷயத்துக்காகவே பெரிய அளவில் கொண்டு சேர்த்துவிட்டீர்கள். அதற்காக நானும் எனது படக்குழுவும் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். “ - இயக்குநர் ராஜீவ் காந்தி ஜீ.வி. பிரகாஷின் ஆக்ரோஷமான இசையில், ராஜூ முருகன் அண்ணனின் கோப வரிகளில் உருவாகி, கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தில் இடம்பெற்ற அம்மண தேசம் பாடலை இன்று காலை 10 மணிக்கு இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்....
சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி

சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும், "என் மேல கை வச்சா காலி" பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம்.சி. (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர். என் மேல கை வச்சா காலி அந்துடும்டா உன்னோட தாலிஎன் மேல கை வச்சா காலி - மகனே அந்துடும்டா உன்னோட தாலி - கேளுமரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி சக்காளி தக்காளி காலிஎன ஹிப் - ஹாப் பாணியில் ஆரம்பமாகிறது பாடல். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திருநெல்வேலியில் 'லைக்கா கோவை கிங்ஸ்' மற்றும் 'சேபாக் சூப்பர் கில்லிஸ் ' இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின் போது வெளியிடப்பட்ட "என் மேல கை வச்சா காலி" பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ‘நாக்க.. முக்க’ போல் ...
ஆட்டைக்கு ரெடியா? – ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ பாடல்

ஆட்டைக்கு ரெடியா? – ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ பாடல்

Songs, காணொளிகள், சமூகம், வர்த்தகம்
"ஆட்டைக்கு ரெடியா? லந்தக்கூட்டு அலும்ப ஏத்து. அலப்பறையா ஆட்டம் போட்டுபந்த போட்டு பறக்க விட்டு ஓசி காஜி.. அடிச்சா மாத்து. என்னா பங்கு?ஆட்டைக்கு ரெடியா? ரெடியா? ரெடியா?செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா?மாமா.. செம்மிர்வோமா? செம்மிர்வோமா? ஹேய்.. செம்மிர்வோமா? செம்மிர்வோமா?மதுரை மண் வாசம் அவிங்க பாசம். புழுதி புயல் வீசும் இவிங்க ரோஷம். நட்ப உசுராக்கும் இதுக கொசுறாக்கும். ஒத்தைக்கு ஒத்தை மோத வேணா கொத்தா மோதலாமா?என்னா பங்கு!ஆட்டைக்கு ரெடியா? ஆட்டைக்கு ரெடியா?செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா?மதுரை.. சிறப்பு!...
தேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்

தேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்

Songs, காணொளிகள்
பராசக்தி படத்தில் இடம்பெற்ற, டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய "தேசம் ஞானம் கல்வி" எனும் பாடல் தற்போது சாம் டி.ராஜ் இசையில் "வந்தா மல" படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

Songs, காணொளிகள், சினிமா
'வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில், “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் படம் பண்றாரோ இல்லையோ, தினமும் ஒரு பாடல் கம்போஸ் செய்வார். அவருக்கு இசை ஞானம் அதிகம். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. மிஷ்கின் சாரின் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது...
ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=fm7W4hZdi-w[/youtube] அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்      ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம் ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்      ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்உன் இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது; இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வசனம் மதுரம் சரிதம் மதுரம்      வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம் சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது; இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வேணுர்மதுரோ ரேணுர்மதுர:      பாணிற்மதுர: பாதௌ மதுரௌ ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியத...