மேடையில் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோக்கள் – புதுப்பொலிவுடன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மேடையில் தோன்றி பல பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். அதன் பின் சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு, ரசிக பெருமக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற நிறுவனமான NOISE AND GRAINS, அந்தப் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட முடிவு செய்து, இந்தப் பதிவுகளை நவீன டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில், ஒளி கலவை செய்து, அதற்கு அச்சாரமாய் முதல் பாடலாக, ரஜினிகாந்தின் மிக முக்கியமான வெற்றிப்படமான பாட்ஷா படத்தில் இருந்து "நான் ஆட்டோக்காரன்" பாடலுக்கு ரஜினிகாந்த் மேடையில் தோன்றி நடனம் ஆடும் காட்சித் தொகுப்புகளை, NOISE AND GRAINS யூடியூப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் விழாவில் நடனமாடிய பாடல்களும், பேசிய வசனங்களும் NOISE AND GRAINS யூடியூப் பக்கத்தில் வெளியிட...