Shadow

Teaser

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

Movie Posters, Teaser, காணொளிகள், கேலரி, சினிமா, திரைத் துளி
'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பிற்கான பிரத்தியேக காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, 'அக்டோபர் 31ஆம் தேதி அன...
கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம்

கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
பீப்பள் மீடியா ஃபேக்டரியும், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸும் இணைந்து வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம், 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும் (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். T.G. விஸ்வ பிரசாத்தும் அபிஷேக் அகர்வாலும் இணைந்து தயாரிக்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்பதிவு செய்ய, கால பைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திகேயா மீண்டும் வந்துவிட்டார். முன்னிருந்ததை விட சிறப்பான முறையில் திரும்பியுள்ளார். இந்த முறை எல்லாம் மனுஸ்மிருதியின் படி நடக்கும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதிரக்ஷிதஹ் தஸ்...
குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

OTT, Teaser, Web Series, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர். ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரைப் பிரபலப்படுத்துவதற்காகக் குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பன்ச்சு’ என்ற வித்தியாசமான உத்தியைக் கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்...
சாணிக்காயிதம் – பொன்னியின் பழிவாங்கும் படலம்

சாணிக்காயிதம் – பொன்னியின் பழிவாங்கும் படலம்

Teaser, காணொளிகள், சினிமா
சாணிக்காயிதம் படம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். பொன்னி மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத் தொடங்கும்போது, ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார். இதனைச் சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியாக கீர்த்தி சுரேஷும், சங்கையாவாக செல்வராகவனும் நடித்துள்ளனர். தெலுங்கில், சின்னி (Chinni) என்ற பெயரிலும், மலையாளத்தில் சாணிக்காயிதம் என்ற பெயரிலும் ஒளி...
மஹாவீர்யர் – டீசர்

மஹாவீர்யர் – டீசர்

Teaser, காணொளிகள்
நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையைத் தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். மஹாவீர்யார் திரைப்படம்...
யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘அனந்தம்’ டீசர்

யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘அனந்தம்’ டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
தமிழ்த் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்” ஆகும். இது 1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த, உணர்ச்சிகரமான தருணங்களைப் பொழுதுபோக்குடன் தரும் ஓர் அழகான இணைய தொடராகும். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்துப் பார்வையிடுவதில் இருந்து இதன் கதை தொடங்குகிறது. அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை. இந்தத் தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வி...
பயில்வான் – டீசர்

பயில்வான் – டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
கிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக எதிரிகளை வேட்டையாடி மிரட்டுகிறார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான திகழ்ந்த சுனில் ஷட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை, ஸ்டன்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஸ்மன், Dr.ரவி வெர்மா, லார்னல் ச்டோவல் (பாக்சிங்), A. விஜய்(குஸ்தி) ஆகியோர் இயக்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தைக் கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. RRR மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன க...