Shadow

Trailer

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, 'காட்டி' எனும் அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில், காட்டி ட்ரைலர் குறித்துப் பட வெளியீட்டிற்கு முன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரமும் நண்பருமான அனுஷ்கா ஷெட்டிக்கு இதயம் கனிந்த குறிப்பை எழுதியுள்ளார். அவர், “காட்டி ரிலீஸ் ட்ரைலர் ரொம்பத் தீவிரமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் ஸ்வீட்டி. முழுக் குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!” என்று கூறியுள்ளார். கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கியுள்ள காட்டி, நிஜத்தன்மை நிறைந்த பின்னணியில் நடைபெறும் சுவாரசியமான சினிமா அனுபவமாக அமைந்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியுடன், விக்ரம் பிரபு, சைதன்ய ராவ் மடாடி, ஜகபதி பாபு ஆகியோர...
நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான 'நிஷாஞ்சி' படத்தின் அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஆக்ஷன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த ட்ரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதைச் சித்தரிக்கிறது. ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா, ரஞ்சன் சந்தேல் மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ, மோனிகா பன்வார், முகமது ஜீஷான் அய்யூப் மற்றும் குமுத் மிஸ்...
மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

Trailer, காணொளிகள், சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியுள்ள 'மாரீசன்' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, 'ஃபைவ் ஸ்டார்' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். கிராமியப் பின்னணிய...
ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi

ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi

Trailer, காணொளிகள், சினிமா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் 'ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தைத் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி.ஆர்., சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன், ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் ...
தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

OTT, Trailer, காணொளிகள்
இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டத்தை செப்டம்பர் 13 அன்று வெளியிட்டது பிரைம் வீடியோ. எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர், தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்திற்குச் செல்லும் மாநகரத்தைச் சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த இணைய தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சா...
கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | டீசர்

கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | டீசர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R.K. விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற பிரவீன் K L படத்தொகுப்பினைச் செய்துள்ளார். இந்த...
க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
க்ரேவன் தி ஹண்டர் என்பது மார்வெலின் மிகச்சிறந்த வில்லன்களில் ஒருவர் எப்படி, ஏன் உருவானார் என்பது பற்றிய கதை. அற்புதமான ஆக்‌ஷன், தீவிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் மற்றொரு ஸ்பைடர் மேன் வில்லனைப் பற்றிய ஸ்னீக் பீக் உடன், மார்வெலின் மிகப் பயங்கரமான வேட்டைக்காரனின் தனிப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. ஆங்கில டிரெய்லர்: https://youtu.be/_y6O-tcfhBIதெலுங்கு டிரெய்லர்: https://youtu.be/krYauKDFXCE டிசம்பர் 13 அன்று தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழியில் ‘க்ரேவன் தி ஹண்டர்’ படத்தைத் திரையரங்குகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது....
மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
சத்யராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' எனும் இணைய தொடரின் ட்ரெய்லரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது. இந்தத் தொடர் தவரும் ஆகஸ்ட் 16 முதல், ஒளிபரப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.  இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார். நடிகர் சத்யராஜுடன் பழம...
முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
சிம்பாவிற்கும், நளாவிற்கும் பிறக்கும் சிங்கக்குட்டியான கியாராவிற்கு, கெளரவ பூமியின் அன்புக்குரிய மன்னரான முஃபாஸாவின் கதையை டிமோனும் பும்பாவும் விவரிக்க, திரைக்கதை ஃப்ளாஷ்பேக்கினில் விரிகிறது. அநாதையான முஃபாஸா தொலைந்து தனியாகத் திரியும்போது, டகா எனும் ராஜவம்சத்தைச் சேர்ந்த டகாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், பயங்கரமான எதிரியை நேரிட்டு, தங்கள் தலைவிதியை மனமொத்துத் தீர்மானிக்கின்றனர்.இப்படம், இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது....
வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
மூன்று பாகங்கள் கொண்ட 'வெனம்' படத்தொடரின் கடைசிப் படமான, "வெனம்: தி ளாஸ்ட் டான்ஸ்" அக்டோபர் 25 அன்று வெளியாகிறது. மரணம் வரை பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்துள்ள எடி ப்ரோக்கையும் வெனத்தையும், பூமியைச் சேர்ந்தவர்களும், வேற்றுலக சிம்பயாட்களும் வேட்டையாடுகிறார்கள். இந்தியாவில், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.  ஆங்கில ட்ரெய்லர்: https://youtu.be/MbIoY50ZOxg...
ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
'ஆலகாலம்' திரைப்படத்தின் ட்ரெய்லரைப் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார். ட்ரெய்லரைப் பார்த்த அவர், அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார். 'ஆலகாலம்' என்கிற திரைப்படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. 'ஆலகாலம்' என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம். இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா...
ஜனகராஜ் நடிக்கும் ‘தாத்தா’ குறும்படம்

ஜனகராஜ் நடிக்கும் ‘தாத்தா’ குறும்படம்

Trailer, காணொளிகள், சினிமா
இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் (Impress Films) சார்பாக, ‘சாக்லேட்’, ‘கொலை விளையும் நிலம்’ ஆகிய படைப்புகளை உருவாக்கியுள்ளார் பத்திரிகையாளர் S.கவிதா. இம்ப்ரஸ் ஃபிலிம்ஸின் அடுத்த படைப்பாக, மூத்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் அவர்கள் நடித்த ‘தாத்தா’ என்ற குறும்படத்தை உருவாக்கி உள்ளனர். நரேஷ் இயக்கிய இப்படத்திற்கு, வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகள் ஆமினா ரஃபீக் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். கலை வடிவமைப்பை சமரும், உடைகளுக்கான பொறுப்பை வாசுகி பாஸ்கரும் கவனித்துள்ளனர். இந்தக் குறும்படத்தில், ரேவதி பாட்டி, ரிஷி, கயல் தேவராஜ், முருகன் மந்திரம், பிரபாகர், ஷ்யாம், தீபா பாஸ்கர் , ஆகியோர் நடித்துள்ளனர் . 16 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் விரைவில் short flix என்ற youtube தளத்தில் வெளியாக உள்ளது. தாத்தா குறும்படத்தின் டீசரை இன்று நடிகர் சூரி அவர்கள் தனது ...