
சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (SMCH), தென் சென்னை கலாச்சாரக் கழகம் (SMCA) ஆகியவை இணைந்து, இந்திரா நகர், அடையாறில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில், 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை சோதனை, கண் மருத்துவம், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, நுரையீரல் செயல்பாடு சோதனை, கேட்கும் சோதனை, இரத்த பரிசோதனை, கண் சோதனை, காது, மூக்கு, தொண்டை/ ஆடியோமெட்ரி, அல்ட்ராசவுண்ட் சேவைகள் இலவசமாக அளிக்கப்பட்டன. மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நடமாடும் மருத்துவப் பேருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த இலவச முகாமில் சுமார் 100 பேர் மருத்துவச் சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.
தென்சென்னை கலாச்சாரக் கழகத்தின் தலைவர் சுதீப் மித்ரா, துணை தலைவர் சந்தீப் டே, மருத்துவர் அனிதா ரமேஷ் ஆகியோர் இணைந்து இந்த இலவச மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.