Shadow

Tag: Mahabharatham stories in Tamil

கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

ஆன்‌மிகம்
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா? பரசுராமர், கர்ணனை ஷத்திரியன் என்று அறிந்து சாபம் அளித்தார். அதனால் அவன் வலிமை குன்றியது, கடைசி நேரத்தில் ஆயுதங்கள் துணை வராமல் போனது என்ற குற்றச்சாட்டு. முதலில் அவன் ஏன் பரசுராமரிடம் பயிலச் சென்றான் ? அவன் துரோணரிடம் பயிலும் போது ஒரு வேண்டுகோள் வைக்கிறான். // http://www.tamilhindu.com/2008/12/mahabharata-discussions-007/ பயிற்சிபெற்ற காலத்தில், அர்ஜுனன் தன்னைப் பார்க்கிலும் அதிகம் தேர்ச்சி பெற்றவனாகவும், பல திவ்ய அஸ்திரங்களை எய்யவும் திரும்பப் பெறுவதற்குமான பயிற்சிகளில் தேறியவனாகவும் இருந்தது கர்ணனால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆகவே, துரோணரைத் தனிமையில் அணுகினான். அவரிடம் கர்ணன் கேட்டுக் கொண்டதை நாரதர் விவரிக்கிறார்: Beholding that Dhananjaya was superior to every one in the science of weapons, Karna. one day approached Drona in pr...
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

ஆன்‌மிகம்
கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். “பயிற்சிக் காலம் தொட்டு எனது மாணவர்கள் அனைவரிலும் மேம்பட்டவனாக விளங்கியவன் அர்ஜ்ஜுனன் ஒருவனே. இன்று பலர் அறிய அதை நிரூபித்துவிட்டான். வில்லுக்கோர் விஜயன் என்ற சொல்லுக்கே பிறந்தவன் அவன்” என்று துரோணர் சான்று கூற. “பலே அர்ஜ்ஜுனா பலே! என் தம்பி எல்லோரினும் பெரியவன்” என்று தருமன் மேடையில் முழங்க. "சத்தம் வேண்டாம். இது வீண் இறுமாப்பு. மற்றவர்களைக் குறைத்துக் காட்டும் அப்படி ஒரு சொல்லை நான் அப்படியே ஏற்க முடியாது. இந்தப் போட்டியில் என் வில் திறமையைக் கண்ட பிறகு, ‘வில்லுக்கொருவன் எவன்?’ என்று சொல்லிக் காட்டுங்கள் " என்றவாறு அங்கே உள்ளே நுழைகிறான் கர்ணன். ‘யார் நீ? உன் தாய் தந்தையர் எவர்?’ என்ற கேள்வியோடு அவமானப்படுவதாகக் கர்ணன் அறிமுகம் ஆரம்பிக்கிறது. நாம் பச்சாதாபம் பொங்க கர்ணனை அணுகினோம். கர்ணனை குலத்தைச் சொல்லி, அவனை அவமதித்து அவனுக்கு ஆசாரியர்கள் பா...
‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

ஆன்‌மிகம்
கர்ணன் சிறந்த நண்பனா? கர்ணன் படத்தில் ஒரு காட்சி வரும். களத்தில் பீஷ்மர் வீழ்ந்திருக்கிறார். கர்ணன் ஓடி வந்து  கேட்கிறான். "ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? வீரத்தின் விளை நிலம் தரிசாகிப் போனதா? பகை குணத்தால் உம்மோடு துணை நில்லாமல் நம்முள் புரையோடச் செய்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடுங்கள்" என பீஷ்மரிடம் கேட்கிறான் கர்ணன். எப்பொழுது? பத்தாவது நாள் போரின் முடிவில். பீஷ்மரும் பெருந்தன்மையாக, "கர்ணா விதி வலியது. சென்றதை மற. வீரனே உன்னை நான் ஒதுக்கியதன் உள் நோக்கம் நீ அறியாய்.  மஹாரதி கர்ணன் என்ற மதிப்புக்கு உரியவன் நீ. உன்னை வெல்ல வல்லவன் யாரும் இல்லை. எத்தனைப்பேர் இறப்பினும் எனக்குக் கவலை இல்லை. ஒரு சூதும் அறியாத இந்தத் துரியோதனனை கடைசி வரை உடனிருந்து காத்துத் தரவேண்டும் என்ற காரணத்திற்காக உன்னைத் தனியாக  ஒதுக்கி வைத்தேன். வீரனல்லவா நான்? வீரத்தை வீரம் அவமதிக்குமா கர்ணா?" என...
கர்ணன் கொடையாளியா ?

கர்ணன் கொடையாளியா ?

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) கர்ணனின் வீரம் மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம். கொடை என்றால் தியாகம் என்று அகராதி சொல்கின்றது. எந்த ஒரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்கு தானமாகத் தருவது. அப்படித் தொடர்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே வள்ளல் தன்மை. சீதக்காதி வள்ளல் பற்றிய கதை தெரியும் இல்லையா? படிக்காசு புலவர் தன் வறுமைக்காக அவரிடம் ...
கர்ணனின் வீரம்

கர்ணனின் வீரம்

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம். பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள். ஆக, கர்ணன் வீரன் என்பது இங்கே அடிபட்டுவிட்டது. கூடவே துரோணர் வில் வித்தையை கர்ணனுக்கு சொல்லித் தர மறுத்தார் என்னும் பொய்யும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. // Vaisamp...