32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை

Dinesh R சேலம் Published: 17/07/2019 1 நிமிட வாசிப்பு Updated: 16/10/2022 சினிமா
எழுத்து அளவு:

poove-pogathey

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “பூவே போகாதே”.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“இப்படம் 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை இது. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை

அந்தக் காலகட்டத்தில் காதலை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்.

தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதைக் கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறோம்” என்றார் படத்தின் இயக்குநர் நவீன் நயனி.

இந்தப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.

>> ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா
>> இசை – சபு வர்கீஸ்
>> பாடல் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்
>> படத்தொகுப்பு – ஜே.பி
>> நடனம் – நரேஷ் ஆனந்த்
>> சண்டை – ராம் சுங்கரா, நபா சுப்பு
>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.