
வணக்கம் நண்பர்களே!
குலோப் ஜாமூன், அப்படின்னாலே குட்டீஸ் முதல் பெரியவங்க வரைக்கும், ரொம்பப் பிடிச்ச ஒரு இனிப்புங்க. இப்பெல்லாம் ரெடிமிக்ஸ் வந்திருச்சு, வாங்கினோமா, சாப்பிடோமான்னு ஆகிருச்சு. திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, என்ன செய்யலாம்? யோசிக்க வேண்டிய அவசியமே இல்லீங்க. வீட்லயே சுலபமா கிடைக்கக் கூடிய பொருட்களை வச்சு மிக்ஸ் இல்லாம, கொஞ்சம் வித்தியாசமா செய்யறதுதான்இந்த ரவா ஜாமூன்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
பால் – 3 கப்
சர்க்கரை – 21/2 கப் + 2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
எண்ணெய் – பொரித்தெடுக்க
ரோஸ் எசென்ஸ்- 1 ஸ்பூன்
ஏலக்காய் -3 (பொடித்தது)
செய்முறை:
Step 1:
பாத்திரத்தில், ரவையைப் போட்டு மிதமான சூட்டில், 1 நிமிடம் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
Step 2:
பாத்திரத்தில், 3 கப் பாலை ஊற்றி , 2 ஸ்பூன் சக்கரை, 3 ஸ்பூன் நெய், ரோஸ் எசென்ஸ் ஊற்றவும். பிறகு, வறுத்து வைத்த ரவையைப் பாலில் போட்டுக் கட்டிப் பிடிக்காமல் நன்கு கிளறவும். கெட்டி ஆனவுடன், அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஒரு 10 நிமிடம் ஆறவிடவும்.
Step 3:
மிதமான சூட்டில் இருக்கும் போது, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைக்கவும்.
Step 4:
ஒரு பாத்திரத்தில், சர்க்கரை, தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். விரும்பினால், சிறிது கலர் சேர்க்கவும். பாகு பிசுபிசுப்பு பதம் வந்தால் போதுமானது. பொடித்து வைத்த ஏலக்காயைச் சேர்த்து கலக்கிவிடவும்.
Step 5:
எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளைப் பொரித்து எடுக்கவும். பொரித்த உருண்டைகளைச் சூடான சர்க்கரை பாகில் விடவும். ஒரு 2 மணி நேரம் ஊறவிட்டுப் பரிமாறவும்.
வித்தியாசமான சுவையுடன், மிருதுவான ரவா ஜாமூன்.
– வசந்தி ராஜசேகரன்