Shadow

ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK. சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான பிளேடு சங்கர், “இது என் நண்பன் படம். கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட், மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். ஆனால் அவருக்கு தேவையானதைச் சரியாக எடுத்துக் கொள்வார். இப்படத்தில் நான் கீர்த்தி சுரேஷின் அக்கா கணவராக நடித்துள்ளேன். அவர் சாதாரணமாக இந்த ஸ்டேஜுக்கு வரவில்லை. ஒரு காட்சிக்கு இப்படிப் பண்ணலாமா, அப்படிப் பண்ணலாமா என உழைத்துக் கொண்டே இருப்பார். ராதிகா மேடத்திடம் ஒரு காட்சியில் செம்மையாக அடி வாங்கியிருக்கிறேன். இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம்” என்றார்.

இயக்குநர் JK சந்துரு, “கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது. ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர். சூப்பராகச் செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்தப் படத்தில் பேசப்படும். கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார். ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம்” என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், “இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்ன போதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன். அவர் இப்படத்தை அழகாக ஷூட் செய்துள்ளார். ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ராதிகா மேத்துடன் முதல்முறையாக நடிக்கிறேன். அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன். அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம். எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்” என்றார்.

சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய இயக்குநர் சந்துரு, நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – JK சந்துரு
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன் B
படத்தொகுப்பு – பிரவீன் KL
கலை – MKT
சண்டை – திலீப் சுப்பராயன்
நிர்வாக தயாரிப்பாளர் – வீர சங்கர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஐஸ்வர்யா சுரேஷ்
தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி
தயாரிப்பு நிறுவனம் – The Route & Passion Studios
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)