
கிங் காங்க்கை எதிர்க்கும் பரிபூரண ராணுவ வீரராக சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ளார். “நான் ஏற்று நடித்திருக்கும் கர்னல் பேக்கார்ட் எனும் பாத்திரத்திற்கு இதயம் இருக்கிறது. தன் படை வீரர்களைக் கொன்ற இராட்சஷ மனிதக் குரங்கை அழிக்க மிக பெர்சனலாக வன்மம் கொள்கிறார். பூமியில் எப்பொழுதும் பெரிதான, வேகமான, பலமான, ஆபத்தான உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால், மனிதர்களிடம் உள்ள விவேகமும், சாதுரியமும், அறிவு அவைகளுக்கு இருந்ததில்லை. அப்போ ஈட்டிகள், வில் அம்புகள், இப்போ துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என மாறிக் கொண்டே வருகிறோம். ஆக, கண்டிப்பாக கிங் காங்கைக் கொல்ல நம்மிடம் ஒரு வழி இருக்கும் என அமெரிக்கக் கலோனலான பேக்கார்ட் அதை நம்புகிறார்.
படத்தின் மிலிட்டரி அட்வைஸர்களில், வியட்நாம் போரில் கலந்து கொண்ட இராணுவ வீரர்களும் அடக்கம். போர் வீரர்கள் செய்த தியாகங்களை நேர்மையாகச் சித்தரிப்பது ரொம்ப அவசியம்னு நான் நினைக்கிறேன்” என்கிறார் சாமுவேல் ஜாக்சன்.
படமாக்கப்பட்ட லோக்கேஷன்களைப் பற்றியும் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “ஹவாயின் மூங்கில் காடுகளில் படமாக்கு பொழுது, டூரிஸ்ட் பஸ்கள் வரும்பொழுதெல்லாம் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிவரும். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டிலுள்ள நீரோடைகளும் நதிகளும் மிக அழகானவை. ஆனால், கங்காருகள் ஃப்ரேமுக்குள் அடிக்கடி வந்துவிடும். ஸ்கல் ஐலேண்டில் கங்காரு கிடையாது என்பதால் அங்கேயும் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிவரும். வியட்னாம் மிகக் கம்பீரமாகவும், வண்ணமயமாகவும், மிக அற்புதமாகவும் இருக்கு. நீங்கள் அந்த மண்ணில் பிறக்காமலும், அந்த மண்ணோடு மானசீகத் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும், அந்த நிலப்பரப்பில் காலம் தள்ளுவது மிகச் சிரமமான காரியம். ஏன் ஒரு படையால், மோதல்களைத் தடுத்து வெற்றி கொள்ள இயலவில்லை என்பதை, அந்நிலப்பரப்பைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், மிக மிக வியட்நாம் அற்புதமான இடமென்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.
தன் படைவீரர்களைக் கொன்ற கிங் காங்கை, சாமுவேல் ஜாக்சன் எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் ஸ்கல் ஐலேண்ட் படத்தின் சுவாரசியங்களில் ஒன்று.