
‘காங்: ஸ்கல் ஐலேன்ட்’ என்ற படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானுண்டு தன் வேலையுண்டு என கிங் காங் வசிக்கும் தீவில், ஆறறிவு கொண்ட மனிதர்கள் மூக்கை நுழைக்கின்றனர். அதனால் கிங் காங்கின் கோபத்திற்கு உள்ளாகின்றனர். இந்த அடிப்படையான ‘கிங் காங்’ கதையை எடுத்துத்தான் சுவாரசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். ‘மோனார்க்’ என்ற ரகசிய குழுவின் வரம்பு மீறல் எப்படி சின்னாபின்னமாகிறது என மிகுந்த பொருட்செலவில் விஷூவல் விருந்துஅளித்துள்ளனர் வார்னர் பிரதர்ஸ்.
சாம்யூல் ஜாக்ஸன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் டாம் ஹிடல்சன், ஜான் குட்மேன், ப்ரீ லார்சன், ஜிங் ட்யான், ஜான் C.ரெய்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹென்றி ஜாக்மன் இசையமைக்க, லேரி ஃபாங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் பியர்சன் படத்தை தொகுத்துள்ளார்.
மார்ச் 10 ஆம் தேதி அன்று, இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.