Shadow

Tag: அசோக் செல்வன்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
லியோனாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே உமா சங்கர்க்குக் காதல் வந்து விடுகிறது. லியோனாவிற்கும் காதல் வந்துவிட, அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸும் ஊடலும்தான் படத்தின் கதை. மீண்டுமொரு ஸ்டாக்கிங் (Stalking) படமாக இருக்குமோ என்ற எண்ணம் எழும்போது, உமாசங்கர் லியோவிடம் காதலைச் சொல்லி விடுகிறார். 'எனக்கு இது செட்டாகாது' என லியோ சொன்னதும், உமா சங்கர் நாயகியைத் தொந்தரவு செய்யவில்லை. மிகவும் ஆசுவாசமாக இருந்தது. நாயகியும் சட்டென காதலை உணரத் தொடங்கிவிடுவதால், அடுத்த படம் 'ரொமான்ஸ்'-இற்குள் போகுமென நினைத்தால், கடைசி வரை அதுக்குள் போகவே இல்லை. க்யூட்டாக வைக்க வேண்டுமெனத் தலைப்பை மிஸ் லீடிங்காக வைத்துள்ளனர். புரிதலில் ஒரு சின்ன பிரச்சனை, தன்னிடம் பொய் சொல்லி விட்டான் என்ற நாயகியின் கோபம்தான் படத்தின் மைய ஓட்டம். 112 நிமிட கால அளவு கொண்ட படம். திருப்பமோ, சுவாரசியமோ இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் முதற்பா...
எமக்குத் தொழில் ரொமான்ஸ் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், பாலாஜி கேசவன் இயக்கத்தில் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் M. திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” ஆகும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளைத் தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக...
”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.   படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது,   இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்...
சபாநாயகன் விமர்சனம்

சபாநாயகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காதலும் கடந்து போகும்; அது காலம் செல்ல செல்ல மறந்து போகும் என்கின்ற 2கே கிட்ஸ்கான டேக் இட் ஈஸி காதல் கதை தான் இந்த சபாநாயகன். அரவிந்த் என்று சொல்லப்படும் ச.பா.அரவிந்திற்கு பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் டிகிரி முடிக்கும் போது ஒரு காதல், பின்னர் சிங்கப்பூரில் இருக்கும் அம்மா அப்பாவை பார்க்கச் சென்ற போது அங்கு ஒரு குட்டி காதல், மீண்டும் பள்ளிகால க்ரஷ் திரும்ப வாழ்க்கையில் வந்ததால் மீண்டும் அவளுடன் காதல், பிறகு எம்.பி.ஏ படிக்கும் போது மற்றுமொரு காதல் இப்படி பல்வேறு காதல்கள் அடங்கிய அரவிந்த்-தின் ஆட்டோகிராப் டைரியே இந்த சபாநாயகன். படம் எப்படியோ தொடங்கி, எப்படியோ நகர்ந்து எப்படியோ முடிந்து போகிறது.  பள்ளிகால காதலோ, கல்லூரி காலக் காதலோ, எம்.பி.ஏ கால காதலோ எதுவுமே மனதில் ஒட்டவில்லை. நாயக கதாபாத்திரமோ தன் காதல் மீதோ, தன் காதலி மீதோ எந்தவித பிடிப்பும் அழுத்தமும் தீவிரத்தன்மையும் இல்லாமல் இர...
“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்

“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்

சினிமா, திரைச் செய்தி
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ த்ரில்லர் படம் “போர்(த்) தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் அசோக் செல்வன், ''இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தைத் தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக் காட்டினோம். யாராவது ட்விஸ்ட்டை உடைத்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட ட்விஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோருக்க...
போர் தொழில் விமர்சனம்

போர் தொழில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை. காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணி என்ன, கொலைகளை நிகழ்த்திய கர்த்தா யார் என சரத் - அசோக் செல்வன் கூட்டணி நூல் பிடித்துக் கண்டுபிடிப்பதே படத்தின் முழுக்கதையும். நாடி நரம்பெல்லாம் க்ரைம் டிப்பார்ட்மென்ட் காவல் அதிகாரி மேனரிசம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடிப்பில் அசரடிக்க முடியும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சரத்குமார்....
“வில்லனாக நடிக்க ஆசை” – அசோக் செல்வன்

“வில்லனாக நடிக்க ஆசை” – அசோக் செல்வன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோகத் தளங்களில் அவரது படங்களுக்குத் தனித்த மதிப்பு இருக்கிறது. 'ஓ மை கடவுளே', 'மன்மத லீலை' என வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜாலியான உரையாடலை நிகழ்த்தினார். அசோக் செல்வன், "நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்...
நித்தம் ஒரு வானம் விமர்சனம்

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது வானம். அதுவே வானத்தின் தனித்த அழகிற்குக் காரணம். மனிதனின் வாழ்க்கையை அழகுப்படுத்துவதும் அவனது வாழ்வில் நிகழும் இத்தகைய மாற்றங்களே! ஆனால் மாற்றத்தை விரும்பாத மனமோ, அதற்கு பயந்து முடங்கி விடுகிறது. ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாழ்க்கையே முடங்கிவிட்டதாகக் கருதும் அர்ஜுன்க்கு வாழ்க்கையின் உண்மையான அழகையும், வாழ்வதற்கான உத்வேகத்தையும் அளிக்க இரண்டு கதைகள் சொல்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி. அந்தக் கதைகளின் ஊடாக அர்ஜுன் செய்யும் பயணமே படத்தின் கதை. மருத்துவர் கிருஷ்ணவேணியாக அபிராமி நடித்துள்ளார். மிகக் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும் நிறைவான ஸ்க்ரீன் பிரசென்ஸை அளித்துள்ளார். அர்ஜூனாக, இரண்டு கதைகளில் வரும் வீரா, பிரபா என மேலும் இரண்டு பாத்திரங்களில் தோன்றியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டும் நேர்த்தியான நடிப்பைக் கொடு...
நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ...
நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ...
மன்மத லீலை விமர்சனம்

மன்மத லீலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு வீடு, ஒரு வாசல் என 2020 இல் மனைவி மகளோடு வாழ்ந்து வரும் அசோக் செல்வனுக்கு, மனைவி மகள் ஊருக்குப் போகும் கேப்பில் ஒரு அழகு பதுமை மூலமாக ஒரு ‘வாய்ப்பு’ வருகிறது. அதை அவர் பயன்படுத்தினாரா? பயன்பட்டாரா? அடுத்து என்ன நடந்தது? இதுவொரு லைவ் கதை. வருடம் 2010! முரட்டு சிங்கிளாக இருக்கும் அசோக் செல்வன் முகநூல் மெஸெஞ்சர் மூலமாக ஒரு பெண்ணுக்கு நூல் விட்டு அப்பெண்ணின் வீட்டிற்கே சம்பவம் நடத்தக் கிளம்பிச் செல்கிறார். சம்பவம் என்னானது என்பது ஒருகதை. இந்த இரண்டு கதைகளையும் சரியாக முடித்துப் போட்டுப் படத்தை முடித்ததில் தான் வெங்கட்பிரபு வெற்றி பெறுகிறார். அசோக் செல்வன் அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக நடித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ் அனைவரும் பொறாமைப்படும் நடிப்பும் லீலையும். ஸ்ரும்தி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியாஸ்யுமன் ஆகிய மூவரும் கொடுத்த வேலைக்குக் குறை வைக்கவில்லை. ரியாஸ்வுமன் மட்டும் கொடுத்த வேலையை விட,...
பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

சினிமா, திரைத் துளி
பல வெற்றி படங்களைத் தயாரித்தவரும், விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாகத் தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்: >> தயாரிப்பு - R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்) >> இணை தயாரிப்பு - கல் ராமன் >> இயக்கம் - சுமந்த் ராதாகிருஷ்ணன் >> ஒளிப்பதிவு - பிரவீன் குமார் >> இசை - போபோ சசி >> படத்தொகுப்பு - ராகுல் >...
இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

சினிமா, திரைத் துளி
சென்ற வாரம் வெளியான படங்களில் 'ஓ மை கடவுளே' படம் வெற்றியை அடைந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களிடம் இப்படம் பற்றிய ரிசல்ட்டைக் கேட்டபோது, "வெள்ளிக்கிழமை ஓப்பனிங்கில் படம் பெரிதாக பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருநாட்களிலும் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் குவியத் துவங்கினார்கள். குறிப்பாக திங்கள் செவ்வாக்கிழமை கூட தியேட்டருக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்" என்றனர். மேலும், இப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை இன்று படக்குழு நடத்தினார்கள். விழாவில் ஹீரோ அசோக் செல்வன் இயக்குநர் அஸ்வத், தயாரிப்பாளர் டில்லிபாபு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். - ஜெகன் சேட்...
கடவுளாக நடிக்கும் விஜய் சேதுபதி – ஓ மை கடவுளே

கடவுளாக நடிக்கும் விஜய் சேதுபதி – ஓ மை கடவுளே

சினிமா, திரைச் செய்தி
“ஓ மை கடவுளே” எனும் திரைப்படம் காதலர் தினச் சிறப்புத் திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரைகையாளர்கள் சந்திப்பில் பேசிய நாயகன் அசோக் செல்வன், "என் அக்கா அபிநயா செல்வம், என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். அவர் தைரியமாக இப்படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்குப் பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம். லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவிட்டார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார்....