Shadow

Tag: அனுஷ்கா

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி மிஸ்...
சைலன்ஸ் விமர்சனம்

சைலன்ஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான முறையில் ஒரு பேய் வீட்டில் கொல்லப்படுகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத அவரது காதலி சாக்‌ஷியும் அமானுஷ்யமான முறையில் தாக்கப்படுகிறார். கொலைக்குக் காரணம் அமானுஷ்யம் சூழ்ந்த அந்த வீட்டின் பேய் என்று அனைவரும் நம்பும் பட்சத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் காவல்துறை அதிகாரியான மகாலக்‌ஷ்மி. கொலைக்கான காரணத்தையும், கர்த்தாவையும் மகாலக்‌ஷ்மி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு மும்மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே என நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம். எனினும், சியாட்டலில் கதை நிகழ்வதாலோ என்னவோ, படத்தில் ஒன்ற முடியாமல் ஒரு அந்நியத்தன்மை இழையோடுகிறது. டீட்டெயிலிங் இல்லாத கத...
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்பது திருமாலைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று. பக்தியைச் சிலாகிக்கும் படமிது. திருப்பதி பெருமாளான பாலாஜிக்கும், அவரது பரம பக்தனான ஹாத்திராம் பாபாக்குமான பிணைப்பே படத்தின் கதை. 'கடவுளைக் காணும் வழி யாது?' என அழகு சிறுவனான ராமன் வினவுவதில் இருந்து படம் தொடங்குகிறது. 'ஓம்' என்ற ராமனின் கடுந்தவம் வைகுண்டத்தை அடைய, பெருமாள் ராமனைக் காண பாலகனாக வருகிறார். சிறுவனைக் கடவுளென உணராமல் துரத்தி விடுகிறார் இளைஞனான ராமன். பின் மீண்டும் எப்படி இறையை உணர்ந்து ஆத்ம பக்தனாகப் பெருமாளுக்கு மிகப் பிரியமானவராகப் பரிணமிக்கிறார் என நெகிழ்ச்சியாகப் பயணிக்கிறது படம். பக்தர் ஹாத்திராமாக நாகார்ஜுனா அசத்தியுள்ளார். அன்னம்மாச்சார்யாவாக முன்பே பக்திப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்த முன் அனுபவம் இதில் அநாயாசமாய் மிளிர்கிறது. பெருமாளுக்கு நித்ய கல்யாண பூஜ்சி செய்வதாகட்டும், அவருடன் பக...
பாகமதி விமர்சனம்

பாகமதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அருந்ததீ அனுஷ்காவை மனதில் கொண்டு பாகமதி உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஓர் அமைச்சரின் மீது பழி போட, அவரது பெர்ஸனல் செகரெட்டரியும், கொலைக் குற்றவாளியுமான ஐ.ஏ.எஸ். அனுஷ்காவை விசாரணைக்காகப் பாகமதிக் கோட்டையில் அடைக்கின்றனர். அக்கோட்டையில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அக்கோட்டையின் அமானுஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்தும், விசாரணையில் இருந்தும் பாகமதி எப்படித் தப்பினார் என்பது தான் படத்தின் கதை. படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர். மிகவும் நல்லவரான அமைச்சர் ஜெயராமை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டுமென சி.பி.ஐ. முடுக்கி விடப்படுகிறது. 'பவர் பாலிடிக்ஸ்' என்றால் என்னவென்றும், அது எப்படி அதிகார வர்க்கத்திற்குச் சாத்தியமாகிறது என்பதையும் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அனுஷ்கா வழக்கம் போல் அசத்தியுள்ளார். அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அல்லவா? ஆனால், ஃப்ளாஷ்பே...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனின்...
சிIII விமர்சனம்

சிIII விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி "சி3" ஆகிவிட்டது. ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் பார்வையாளர்கள் கொலைவெறி ஆகவேண்டும். ஆனால், நின்று நிதானித்து மூச்சு விட சூரியே உதவுகிறார். இரண்டாம் பாதிக்கு பின் தான் விட்டல் எனும் வில்லனைச் சேர்ந்தாற்போல் திரையில் 30 நொடிகளுக்கு மேல் பார்க்க முடிகிறது. முதல் பாதியில், எக்சர்சைஸ் செய்கிறார்; தனி விமானம் சள்ளெனத் ...
என்னை அறிந்தால்… விமர்சனம்

என்னை அறிந்தால்… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். காக்...