
நெஞ்சுக்கு நீதி விமர்சனம்
ஆர்டிகள் 15 எனும் ஹிந்திப் படத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு, மிக நேர்த்தியாக மூலத்தின் சாரம் குறையாமல் கொடுத்துள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜா. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் என்றில்லாமல், சில காட்சிகளைத் தவிர்த்தும், உதயநிதி ஸ்டாலினின் அரசியலுக்கு பலம் சேர்க்கும் காட்சிகளைச் சேர்த்தும், நெஞ்சுக்கு நீதியைத் தூக்கி நிலைநிறுத்தியுள்ளனர்.
விஜயராகவன் ஐ.பி.எஸ்., பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கிராமப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார். இரண்டு தலித் சிறுமிகளைக் கொன்று மரத்தில் தூக்கில் போட்டுத் தொங்க விட, அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார் விஜயராகவன். அரசியல் செல்வாக்குள்ள மனிதர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி, எப்படிக் குரலற்றவர்களுக்கு விஜயராகவன் நீதி வாங்கித் தருகிறார் என்பதே படத்தின் கதை.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஐயராக சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கியுள்ளார். அவரது போலியான பணிவும், அச்சுறுத்தும் நயவஞ்சகம...