Shadow

Tag: அருந்ததி நாயர்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பே கதையைச் சொல்கிறது. ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கிறது. அது யாருக்கு கிடைக்கிறது, எப்படி கிடைக்கிறது, அதை அந்தக் கதாபாத்திரத்தால் அனுபவிக்க முடிந்ததா, அந்தப் பொற்காசுகளை பயன்படுத்துவதில், சொந்தம் கொண்டாடுவதில் எத்தனை சவால்கள் வந்தன என்பதே இந்த ஆயிரம் பொற்காசுகளின் கதை. பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் “ஆயிரம் பொற்காசுகள்” ஆகும்.  அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார். விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவர்களோடு ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.  விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும்...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது அவரது பூர்வஜென்மத்தைக் கிளறி எப்படி அலைக்கழிக்கிறது என்பதும்தான் படத்தின் கதை. குரல்கள் கேட்பதை ‘ஆ’ நாவலிலிருந்தும், அதற்கான காரணத்தை ‘லூசி’ படத்திலிருந்தும் தழுவி சைத்தானை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ நாவலினின்று, மிகக் கச்சிதமான முதல் பாதியைத் தந்துள்...
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள். 50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி தன் படத்தில் நடிக்க வைத்து, நாயகி அருந்ததி நாயருக்குத் தெரியாமல் கேண்டிடாக ஷாட்கள் எடுத்துப் படத்தை முடித்து விடுகிறார். நாயகியோ விருமாண்டியின் மகள். பிரச்சனை பெரிதாகி நாயகனின் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. பிறகு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. புதுமுகம் சஞ்சய் நன்றாக நடனம் ஆடுகிறார்; நடிக்கவும் செய்கிறார். அதிக...