Shadow

Tag: அருள்நிதி

”நான் விழுந்து கொண்டிருக்கும் போதே, என்னை தூக்க கை கொடுத்தார் அருள்நிதி” – டிமாண்டி காலனி 2 டிரைலர் வெளியீட்டில் அஜய்ஞானமுத்து பேச்சு

”நான் விழுந்து கொண்டிருக்கும் போதே, என்னை தூக்க கை கொடுத்தார் அருள்நிதி” – டிமாண்டி காலனி 2 டிரைலர் வெளியீட்டில் அஜய்ஞானமுத்து பேச்சு

சினிமா, திரைச் செய்தி
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'டிமான்டி காலனி 2' .விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்..தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது...பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட் வேர் கம்பனி ஏன் படத்தயாரிப்பு என்ற கேள்வி இருந்தது. மக்களிடம் சென்று சேர வேண்டும் ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டூடியோவாக இர...
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  வெளியானது

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி,  அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”.  2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம்  பாகம், 8 வருடங்களுக்குப்  பிறகு 'டிமான்ட்டி காலனி 2'  என்ற பெயரில், மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  சிறப்பான VFX காட்சிகளுடன் உருவாகி வருகிறது.  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, நடிகர் அருள்நிதி  நாயகனாக நடித்துள்ளார்.மேலும் நடிகை பிரியா பவானி சங்கர்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. ...
டைரி விமர்சனம்

டைரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
டி-பிளாக், தேஜாவு போன்ற த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, ஒரு சூப்பர் நேட்சுரல் த்ரில்லரில் நடித்துள்ளார் அருள்நிதி. பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை – கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க ஊட்டி வருகிறார் உதவி ஆய்வாளர் பயிற்சியில் இருக்கும் வரதன். வழக்கு சம்பந்தமாக மிகச் சிறிய துப்பு கிடைக்கும் பொழுது, அவரது கார் காணாமல் போகிறது. காரைத் திருடியவனைத் தேடும் வரதன், ஒரு பேருந்தில் ஏறுகிறார். பேருந்தில், அவர் விசாரிக்கும் வழக்கு சம்பந்தமான நகைகள் கிடைப்பதோடு, அமானுஷ்யமாகப் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. அமானுஷ்ய சம்பவங்களுக்கும், பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மையக்கரு. திரைக்கதை, விசாரணையில் இருந்து விலகி, பேருந்திற்குள்ளேயே சிறிது நேரம் பயணிக்கிறது. வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடி, அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் தோடர் மக்கள், மகனைப் பிரிந்...
“தேஜாவு” வெற்றிக் கொண்டாட்டம்

“தேஜாவு” வெற்றிக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது. இந்நிலையில் ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர். இது குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ‘தேஜாவு’ படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்கள் இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்திப் பொதுமக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றிப்படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ...
தேஜாவு விமர்சனம்

தேஜாவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேஜாவு என்பது ஒரு ஃப்ரெஞ்ச் சொல். ஒரு நிகழ்வு, ஏற்கெனவே நிகழ்ந்தது போல் தோன்றினாலோ, அல்லது புதிதாய் ஓர் இடத்திற்குச் செல்லும்போது முன்பே அங்கு வந்திருப்பது போல் தோன்றினாலோ, அது தேஜாவு என அழைக்கப்படும். இப்படத்தில், ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஒரு கடத்தலை, மீண்டும் அதே போல் நிகழும்படி உருவாக்குகின்றனர். யார், ஏன், எதற்கு, எப்படி என்பதுதான் படத்தின் கதை. டிஜிபி மகள் பூஜா கடத்தப்படுகிறாள் என எழுத்தாளர் சுப்பிரமணி எழுதினால், அது அப்படியே நடக்கிறது. இவர் ஏதேனும் எழுதினாலே, அது அடுத்த நிமிடமே நிகழ்கிறது. ஒன்று, சுப்பிரமணி எழுதுவது தற்செயலாக இருக்கலாம்; அல்லது, தீர்க்கதரிசனாமாக (prophecy) இருக்கலாம்; இல்லையெனில், ஏதோ பித்தலாட்டமாக இருக்கலாம். குழம்பிப் போய் நிலை குலையும் டிஜிபி ஆஷோ பிரமோத், மகளைக் கண்டுபிடிக்க, விக்ரம் குமார் எனும் அண்டர்கவர் அதிகாரியை வரவழைக்கிறார். பூஜாவைக் கண்டுபிடிக்க விசா...
எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன் மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் நீட்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். MNM Films சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது, ”இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக் கதையைக் கூறிய போதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரீட்சார்த்த முயற்சிகளுக்குச் செவி சாய்ப்பவர் அவர்...
K-13 விமர்சனம்

K-13 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
K13 என்பது சோவியத் யூனியனின் பிரபலமான ஏவுகணைகளில் ஒன்று. அமெரிக்காவின் சைட்வைண்டர் எனும் ஏவுகணையை ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து K13 ஏவுகணையைத் தயாரித்து அசத்தியது சோவியத் யூனியன். அப்படி, இப்படத்தின் க்ளைமேக்ஸில் பிரதான கதாபாத்திரமான திலீப், ஒரு சம்பவத்தைத் தனக்குச் சாதகமாய் 'ரிவர்ஸ்' செய்து பயன்படுத்திக் கொள்கிறான். ஆக, K13 எனும் தலைப்பை ரிவர்ஸ் செய்யும் சாதுரியத்திற்கான குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பாரில் சந்தித்துக் கொள்ளும் மதியழகனும் மலர்விழியும், ஒன்றாக மலர்விழியின் வீட்டிற்குச் செல்கின்றனர். விழிப்பு வந்து மதியழகன் கண்ணைத் திறந்தால், அவன் நாற்காலியில் கட்டப்பட்டிருக்கிறான். அந்த நாற்காலியின் பின்னாலுள்ள சோஃபாவில் வலதுக்கை நரம்பு அறுக்கப்பட்டு இறந்து கிடக்கிறாள் மலர்விழி. அது கொலையா, தற்கொலையா, எதற்காக ஏன் எப்படி மலர்விழி இறந்தாள் என்ற சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி தான் படத்தின் கதை. ...
இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலை, நான்கு பேர் மீது சந்தேகம் என்ற அகதா கிறிஸ்டி பாணி மர்டர் மிஸ்ட்டரி படத்தை நான் லீனியர் திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மாறன். நாயகனை அதிமனிதனாகக் காட்டுவது தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியப் பண்பாடுகளில் ஒன்று. ஆனால் அதற்கான நியாயத்தை 99% படங்கள் தந்ததேயில்லை. இதிலும் பரத்தாக வரும் அருள்நிதி சர்வ சாதாரணமாக அனைவருடனும் சண்டையிடுகிறார். போலீஸை அடித்துத் தப்பிக்கின்றார், கொலையாளியைப் பிடிக்கத் திட்டமிடுகின்றார், வியூகங்கள் வகுக்கின்றார். இதற்கான குறைந்தபட்ச நியாயம் கூட அந்தக் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் வழங்கவில்லை. ‘எவ்வளவோ பார்க்குறீங்க, இதையும் ஏத்துக்கோங்க’ என வைத்து விட்டார் போல. வசதியானவர்களின் பலவீனங்களை உபயோகித்து பணம் பறிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட சிலர் அவர்களைப் பழி வாங்க முயற்சி செய்கின்றனர். இந்தச் சிக்கல...
பிருந்தாவனம் விமர்சனம்

பிருந்தாவனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ராதாமோகனிடமிருந்து மீண்டுமொரு ஃபீல் குட் படம். கேட்க முடியாததாலும், பேச முடியாததாலும், தனிமையைக் குறித்த இருப்பியல் சார்ந்த அகப் பிரச்சனையில் உழல்கிறார் அருள்நிதி. அதிலிருந்து அவரது ஆதர்சமான நகைச்சுவை நடிகர் விவேக், அருள்நிதியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்காகவே தோன்றிக் குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ளது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால், பிருந்தாவனம் – ‘விவேக் மயம்’ என்றே கூறவேண்டும். மரண நாளை எண்ணிக் கொண்டிருப்பவர், நான்கு வயது மகனைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர், தனிமையைக் கண்டு மிரண்டு அனுதாபத்தை எதிர்பார்க்கும் இளைஞர், மகனை இழந்து விட்ட துக்கத்தை மறைக்கும் கலைஞர் என படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உப கதை உள்ளது சிறப்பு. படத்தின் பலமும் பலவீனமும் கூட அதுவே! கதாபாத்திரங்களுக்கென ஒரு கதை இருப்பது பலம் என்றால், படம்...
மெளனகுரு விமர்சனம்

மெளனகுரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 மெளனகரு - ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம்.பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் காவல்துறையினர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.மருத்துவ மாணவி ஆர்த்தி ஆக இனியா. படத்தின் நாயகி என்றே சொல்ல முடியாது. திரையில் மட்டுமே தோன்றக் கூடிய பெண் போலில்லாமல் அன்றாட வாழ்வில் நாம் காணும் எண்ணற்ற கல்லூரிப் பெண்களில் ஒருவராக தெரிகிறார்.  எந்தவித பூச்சுகளும் அற்று நெற்றியில் பருக்கள் கொண்ட ப...