Shadow

Tag: ஆடுகளம் நரேன்

பாரதிராஜா, நட்டி நடிப்பில் ஹைபர் லிங்க் கதையான ”நிறம் மாறும் உலகில்“

பாரதிராஜா, நட்டி நடிப்பில் ஹைபர் லிங்க் கதையான ”நிறம் மாறும் உலகில்“

சினிமா, திரைச் செய்தி
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேச...
மதிமாறன் விமர்சனம்

மதிமாறன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அப்பார்ட்மென்ட்களில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்கள், உருவம் குள்ளமாக இருந்தாலும் தன் பாசமான தாய் தந்தையரோடும், தனக்கு உறுதுணையாக இருக்கும் தன் அக்காள் மதியுடனும் சந்தோஷமாக வாழ்ந்தபடி தன் அப்பாவைப் போல் வருங்காலத்தில் ஒரு போஸ்ட்மேனாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் நெடுமாறன். இந்த இரு வேறு புள்ளிகளும் சந்திக்கும் இடம் தான் “மதிமாறன்” திரைப்படத்தின் கதை. நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார். இவர் தான் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அயலான்” படத்தில் அயலான் வேடத்தில் நடித்து இருக்கிறார். மதிமாறன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். தன்மான உணர்வு, சமூகத்தின் மீதான வெறுப்பு, அக்காள் மதி மீதான அன்பு, தந்தையின் மீதான மரியாதையும் அவர் தொழில் மீதான பிடித்தமும்,  சக தோழியுடனான காதலும் நட்பும் என எ...
”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு

”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு

சினிமா, திரைச் செய்தி
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்… தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன...
“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

சினிமா, திரைச் செய்தி
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக...
”சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்” – ஞானவேல்ராஜா

”சந்தானத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்” – ஞானவேல்ராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை  2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்லப் ...
இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலிக்கும் இளம் பெண்.  அதே நேரம் வரிசையாக ஒரு வழக்கோடு சம்பந்தப்பட்ட சில முக்கியப் புள்ளிகளை கடத்தி கொலை செய்து வரும் ஓர் இளம் படை. இந்த இரண்டுக்குமான தொடர்பே ”இந்தக் க்ரைம் தப்பில்ல” படத்தின் ஒன்லைன். தேவகுமார் இயக்கத்தில்  மதுரா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகி இருக்கும் இப்படத்தில் ஆடுகளம் ‘நரேன்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவரோடு சின்னத்திரை புகழ் பாண்டி கமல்,  மேக்னா ஈழன், முத்துக்காளை மற்றும் புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். பழிவாங்கும் இளைஞர் படையை முன்னின்று நடத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.  படம் முழுவதும் காலில் அடிபட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டே இளைஞர்களை ஒன்று திரட்டி வழிநடத்தும் கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பகா செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். ...
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“என் படத்துல, ஒண்ணு, நாயகன் கத்திப் பேசணும். இல்லன்னா, கத்தியால பேசணும்.” - இயக்குநர் முத்தையா நீதி, நேர்மை, நியாயம். அதற்காக அடி, வெட்டு, குத்து என களத்தில் இறங்கி வெளுக்கிறார் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நீதி, நேர்மைக்காக அடிக்கிறார் எனப் பார்த்தால், ரிஷி ரித்விக்கை அடித்துவிட்டு அவரது கூலிங் கிளாஸை எடுத்துக் கொள்கிறார். ‘என்னய்யா உன் நியாயம்?’ என யோசித்தால், ‘என்னை அடிச்சுட்டான்’ என ரிஷி ரித்விக்கும் அவரது அப்பாவை மறுபடியும் சண்டைக்கு அழைத்து வருகிறார். 'என்னங்கடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!' என பார்வையாளர்கள் நெற்றியைச் சுருக்க, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமோ அவரையும் சீரியசாகப் போட்டு வெளுக்கிறார். அவர் ஃப்ரேமில் சண்டை செய்து கொண்டேயிருக்க, படத்தில் மூன்று மூத்த வில்லன்கள், அவர்களது வாரிசுகளாக ஏழு இளைய வில்லன்கள். தமிழ்ச்செல்விக்கு 100 ஏக்கர் நிலமும், 6 பெரிய வீடு...
காரி விமர்சனம்

காரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது. குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அதை நடத்த சசிகுமாரின் வருகை தேவையாக இருப்பதால் ஊர் சசிகுமாரை நாடுகிறது. சசிகுமாருக்கும் ஊருக்குச் செல்வதற்கான ஒரு எமோஷ்னல் காரணம் அமைய, சசிகுமார் ஊருக்குச் சென்று தன் ஊரின் வேரை எப்படிக் காக்கிறார் என்பது காரியின் திரைக்கதை. மிகையில்லாத நடிப்பு தான் சசிகுமாரின் பலம். சரியான ஜாக்கி இல்லையென்றால் குதிரை தறி...
யு டர்ன் விமர்சனம்

யு டர்ன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய 'யு டர்ன்' எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் 'கேர்ஃபுல்' என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. ஆனால், அப்படி யு டர்ன் எடுத்த அன்றே அவ்வனைவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகின்றனர். அது தற்கொலையா, கொலையா என்று, நாயக் எனும் காவல்துறை அதிகாரியின் உதவியோடு துப்புத் துலக்குகிறார் ரட்சனா. வேளச்சேரி மேம்பாலத்தில், யு டர்ன் எடுத்தவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களுக்கு, முழு நீள த்ரில்ல...
மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்

மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் 'யு-டர்ன்'. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'யு-டர்ன்' படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. "இந்த யு-டர்ன் கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் த்ரில...
கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார். இத்தகைய தீவிர ஞாபக மறதியுடைய கஜினிகாந்த்க்குக் காதல் வந்தால்? தனது மறதியை மீறி எப்படித் தன் காதலில் ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை. ‘பலே பலே மகாதிவோய்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீ-மேக் இந்தப் படம். ‘ஹர ஹர மஹாதேவகி’ புகழ் சன்தோஷ் P.ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்...
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் விமர்சனம்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு கந்து வட்டியில் பணம் வாங்குகிறான் கார்த்திக். பணத்தை கெடுவுக்குள் கட்டாததால் கந்துவட்டிக்காரனால் மிரட்டப்படும் கார்த்திக், பணத்துக்காக என்ன செய்கிறான் என்றும், அதன் சங்கிலித் தொடர் விளைவுகளாக என்ன நேர்கிறது என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. எப்படியாவது ரசிகர்களை ஈர்த்து விட வேண்டுமென வைத்த தலைப்பு போலும்! மூன்று மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்று சொன்ன கார்த்திக்கிடம், “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என நினைச்சேன். ஏமாத்திட்டியே!” என்கிறான் கந்துவட்டிக்காரன் படம் தொடக்கத்திலேயே. இந்த வசனம் தான் படத்துக்கும் தலைப்புக்குமான ஒரே தொடர்பு. ஆனால் நாயகன் அவ்ளோ வெள்ளையும் கூடக் கிடையாது. படத்தில் இரண்டு கதைகள் ஒரு புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. ஒன்று, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசம்; மற்றொன்று,...
ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்

ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜிப்பா என்பது நாயகனுக்கான குறியீடு, ஜிமிக்கி என்பது நாயகிக்கான குறியீடு. ஜிப்பாக்கும் ஜிமிக்கிக்குமான ஊடல்தான் திரைப்படத்தின் கதை. சென்னை டூ கூர்க், கூர்க் டூ சென்னை என படத்தின் பெரும்பகுதி பயணத்திலேயே கழிகிறது. நாயகனும் நாயகியும் வழியில் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் சுவாரசியமானவர்கள். முக்கியமாக கன்னட விவசாயியாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மனதைக் கனக்க வைக்கிறார். படத்தில் நெகிழ்ச்சிக்குரிய காட்சிகள் ஏராளமாக உண்டு. ஆடுகளம் நரேனும், விஜய் டி.வி. ‘தாயுமானவன்’ புகழ் செளந்தரராஜனும் பேசும் காட்சிகள், இளவரசு தன் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகள், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் அவர் மனைவியும் வரும் காட்சிகளை ஆகியவை உதாரணமாகச் சொல்லலாம். படத்தில் வில்லன் இருந்தே ஆக வேண்டுமென்ற திரை இலக்கணத்தை மீறக் கூடாதென திணித்துள்ளனர் குபீர் வில்லனை. அதன் பிறகு வரும் லோ பட்ஜெட் மெடிக்கல் மி...
ஆடுகளம் விமர்சனம்

ஆடுகளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆடுகளம் - விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார். பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண்டைக்கு ஒரு யு...