Shadow

Tag: ஆட்டிஸம்

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

கட்டுரை, சமூகம், புத்தகம்
ஒரு ஆட்டிசக் குழந்தையின் அம்மாவாக, சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியையாக, தனது அனுபவங்களை அழகாகத் தொகுத்து, 'எழுதாப் பயணம்' எனும் நூலை எழுதியுள்ளார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். இந்நூலின் சிறப்பம்சம், எவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள ரொம்ப எளிமையான மொழிநடையே ஆகும். சமூகத்தில், ஆட்டிசம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. அது ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை வைத்துச் சம்பாதிக்க சிலர் தொடங்கிவிட்டனர். நம் மக்களின் அறியாமை மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆட்டிசத்துக்குத் தீர்வு உண்டு என மக்களை நம்ப வைத்து பணம் பார்க்கின்றனர். லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து, இத்தகைய வலையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் ஏமாந்து விடக்கூடாதென, கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பத்திலும் பேசி வருகின்றனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றி, பொதுவெளியில் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லவேண்டிய அவசியம் இன்னும் அப்படி...
ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

கவிதை, படைப்புகள்
கம்பிகளில் தொத்திக் கொண்டிருந்த பாடல்கள் ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கின கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு நான் யார் என்பதற்கான ஒரு வார்த்தையின் பிறப்பை செவிமடுக்க ஆரம்பித்தேன். பளீச்சென்ற கிளியைப் பிடிக்கத் திறந்தே இருக்கும் கூண்டுகளைப்போல என் கண்களை வைத்துக் கொண்டு எனக்குள் இருக்கும் உலகைப் பிடிக்க நடை பயில்கிறேன் மூன்றடிகள் முன்னோக்கி மூன்றடிகள் பின்னோக்கி திரும்பத் திரும்ப நடக்கிறேன். என் பாதையினால் உலகைச் சுற்ற விழைகிறேன். சுற்றிச்சுற்றி வருகிறேன் எடையற்று மேலெழும்பி கீழே விழுகிறேன். அம்மாவின் திரைச்சீலைகளைப் போல் மேகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் உள்ளன. என் வாயில் ஒரு புளிப்புச் சுவை உள்ளது படுக்கைக்கு அருகிருக்கும் ஒரு விளக்கு போல நிற்கிறேன் இதமான கைகளின் வன்முறையான தொடுதலின் போதோ கூர்மையாக நோக்கும் அன்பான பார்வையினாலோ ஒரு துப்பாக்கி பின்நகர்வது போல் பின்னிடுகிறேன...
ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

சமூகம்
“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன். நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில ...
எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

மருத்துவம்
ஜூன் 26 அன்று, ட்ரைமெடும் வித்யாசாகர் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் இணைந்து, AUTISM – Through the lens of Multiple Intelligence என்ற கவர்ந்திழுக்கும் அற்புதமான தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்கள் (ஆட்டிசம் - விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு இது). ஹாவெர்ட் கார்ட்னர் எனும் அமெரிக்க உளவியலாளர், 1983 இல் ‘பல்திற அறிவாற்றல் (Multiple Intelligence)’ எனும் தியரியை உருவாக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்துள்ளது என்ற பொதுவான கருத்தாக்கம் தான் இந்தத் தியரி எனினும், குழந்தைகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களது திறனை வளர்க்க இத்தியரியைப் பயன்படுத்தலாம். பல்திற அறிவாற்றலை (MI) எட்டாகப் பிரிக்கிறார் ஹாவெர்ட் கார்ட்னர். அவற்றைக் கொண்டு, குழந்தைகளது தனித் திறமையை அடையாளம் கண்டு எப்படி அவர்களது செயல்திறனை ஊக்குவிப்பது எனவும், அப்படி அடையாளம் கண்ட...