Shadow

Tag: ஆரி

“பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி ஆதங்கம்

“பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி ஆதங்கம்

சினிமா, திரைச் செய்தி
நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.இப்படம் வரும் டிச-29ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா போரம் மாலில் ர...
நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

சினிமா, திரைச் செய்தி
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் & பேவியூ ப்ராஜெக்ட்ஸுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஓர் அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 ஆவது நாளைப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்...
தீபாவளிக்கு வெளியாகும் ஆரியின் ‘பகவான்’

தீபாவளிக்கு வெளியாகும் ஆரியின் ‘பகவான்’

சினிமா, திரைத் துளி
பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப் பிரமாண்டமான பாடல் காட்சி, கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் மித்தாலஜிகல் திரில்லர் திரைப்படம் “பகவான்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்காக, கலா மாஸ்டர் நடன அமைப்பில், மிகப் பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுகென்றே 3 நாட்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்துக் கொண்டு பாடல் காட்சியில் பங்கேற்று...
அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

சினிமா, திரைச் செய்தி
காதல் அம்பு எனும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பேசிய நடிகர் ஆரி, “இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும். இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார். இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார்...
இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

சினிமா, திரைச் செய்தி
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் 'எவனும் புத்தனில்லை'. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. "எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறிய படம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒரே போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது" என்றார் இயக்குநர் மீரா கதிரவன். இசையமைப்பாளர் மரியா மனோகர், " 'எவனும் புத்தனில்லை' என்ற தலைப்பே எல்லோரையும் ஈர்க்கக்கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்தத...
பிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

பிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

சினிமா, திரைச் செய்தி
ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். இயக்குநர் அமீர், "எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாகப் பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகைத் தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாய...
மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

சினிமா, திரைச் செய்தி
ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். அவ்விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், " 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும் இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது. இப்ராஹிம் ராவுத்தர், நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இ...
உன்னோடு கா விமர்சனம்

உன்னோடு கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து தலைமுறைக்கு முன், இரண்டு குடும்பங்களுக்குள் மூண்ட பகை, சிவலிங்கபுரம் எனும் ஊரையே வடக்கு, தெற்கு என இரண்டு ஊராகப் பிளவுபடுத்தி விடுகிறது. சிவலிங்கபுரம் மீண்டும் எப்படி ஒன்றிணைகிறது என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவைப் படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களே! இப்படத்தின் கதாபாத்திரத் தேர்வுகள் கச்சிதமாகக் கதையோடு பொருந்துவதோடு நகைச்சுவௌக்கும் உத்திரவாதமளிக்கிறது. தன் கதையை, இயக்குநர் ஆர்.கே.-விடம் தந்து படத்தைத் தயாரித்துமுள்ளார் அபிராமி ராமனாதன். ஆர்.கே.வின் திரைக்கதையும் வசனங்களும் நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது. தேசத்தின் அடையாளமாகவும், சிலை கடத்தல்காரர் காசியாக வரும் மன்சூர் அலிகானும், ஆள் கடத்தல்காரர் 'யோகா மாஸ்டர் மார்த்தாண்ட'மாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் அதற்கு உதாரணங்கள். தங்களது மகனும் மகளும் ஊரை விட்டு ஓடி விட்டார்கள் என அறிந்ததும் அதைக் கொண்டாடுகின்றனர் ஐந்து தலைமுறை பகையாளிகள...