Shadow

Tag: இசையமைப்பாளர் கோபி சுந்தர்

‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் தயாராகியிருக்கும் படம் 'விஜயானந்த்' ஆகும். 'ட்ரங்க்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்குக் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாகத் த...
மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும் இல்லாத நேரடியான கதை. ஏற்கெனவே ஏசியாநெட்டிலும் இன்ன பிற தொலைக்காட்சிகளிலும் அலசப்பட்ட கரு. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கில் பணிபுரிந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் பிணைக்கதிகளாகச் சிக்கி மீட்கப்பட்டவர்களின் கதைதான் இது என்று தெளிவாகக் கதையின் க்ளைமாக்ஸையே சொல்லி விட்டுத் தொடங்கும் படம். வெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களுக்கு அந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் உறைந்து போன நிமிடங்களை, அதிலிருந்த பயத்தை, அந்த நாட்களின் வேதனையை, விட்டு வருவதா அங்கேயே இறப்பதா என்ற ஊசலாட்ட மனநிலையின் வலியை ஆழமாகக் கடத்துவதில்தான் ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து முதன்முறையாக இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ் நாராயணன், தன் முதல் படத்திலேயே தன்னைத் தேர்ந்த இயக்கு...
என்னுள் ஆயிரம் விமர்சனம்

என்னுள் ஆயிரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அனைவரின் மனதிலும் ஆயிரமுண்டு. சந்தர்ப்பங்களைத் தவறவிடக் கூடாதென, எதையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் அஷோக்கிற்குள்ளும் ஆயிரமுள்ளது. அதிலொன்று கை நழுவிப் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இசைக்கேடான செயலொன்றைப் புரிந்து விடுகிறான். அதனால் அவனுள்ளிருந்த ஆயிரமும் எப்படி ஒன்றில்லாமல் போகிறது என்பதே படத்தின் கதை. அஷோக் எனும் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கார் டெல்லி கணேஷின் மகன் மஹா. தன் மகனுக்காக, இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார் டெல்லி கணேஷ். இப்படியொரு கதையை, முதற்படமாக நடிக்கத் தேர்ந்தெடுக்கவே ஒரு துணிவு வேண்டும். குறிப்பாக படத்தின் முதல் பாதி கதை. 5 ஸ்டார் ஹோட்டலின் பாரில் வேலை செய்பவராக மஹா. நாயகனாக மனதில் பதிய மறுத்தாலும், நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு நபராக அவரைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. குடித்து விட்டு அஷோக் மழைக்கு ஒதுங்குமிடத்தில் ஆர்த்தியும் ஒதுங்குகிறார்; ஆர...
காதலைக் கொண்டாடும் தோழா

காதலைக் கொண்டாடும் தோழா

சினிமா, திரைத் துளி
இரண்டு ஆண்களுக்கிடையே நிலவும் ஆத்மார்த்தமான நெருக்கத்தையும் நேசத்தையும் சித்தரிக்கும் படம் தோழா. மாற்றுத்திறனாளியாக நடிக்கும் நாகர்ஜுனாவின் பன்முக திறமையை இப்படம் வெளிபடுத்தும். இது அவரது வாழ்நாளில் நடிக்கும் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாகக் கண்டிப்பாக அமையும். படத்தில், அவரது உற்றத் தோழனாக கார்த்தி வாழ்ந்துள்ளார். கதாநாயாகியாக தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, இப்படம் இந்த ஆண்டு மார்ச்சில் படம் வெளிவர உள்ளது. வாழ்வைக் கொண்டாடும் இப்படம், இரண்டு நண்பர்களுக்கிடையேயான உணர்ச்சிகரமான பயணத்தைச் சொல்கிறது. பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்து விட்ட குணசித்திர நடிகை கல்பனா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரான்ஸ், பல்கேரியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதுவரை திரையில் கண்டிராத புதிய இடங்களில் எல்லாம் ஒளிப்பதிவு செய்துள்ளார் P.S.வினோத். படத்திற...