Shadow

Tag: இன்பராஜா ராஜாலிங்கம்

கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
DeAr விமர்சனம்

DeAr விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம். கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இ...
சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆ...