Shadow

Tag: ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களி...
பேரன்பு விமர்சனம்

பேரன்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையைச் சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது. மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது 'பேட்' மாற்றுவதிலிருந்து, மூளை முடக்குவாதமே வந்தாலும் உடல் தினவுகள் அவர்களையும் விட்டு விடுவதில்லை என்றறிந்து தன் மகளின் உடல்பசியைத் தீர்க்க எவரேனும் கிடைப்பார்களா என்று ஒரு தகப்பனாக யாசிப்பதென்று பேசாப்பொருளைப் பேசும் படம் உலுக்கி விடுகிறது ஆன்மாவை. 'மூளை முடக்கு வாதம் வந்த அல்லது உடல் குறைபாடுள்ள மனிதர்களிடம் இனியாவது பேரன்போடு நடந்து கொள்ளுங்கள் பதர்...
மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

சமூகம், சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில...