Shadow

Tag: காஜல் அகர்வால்

கோமாளி விமர்சனம்

கோமாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு. ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?' என இந்த உலகத்தைப் பார்த்து கோமாளி போல் கேள்வி எழுப்புகிறான். கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி ஜால...
மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது. படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் காஜல் அகர்வாலுக்கு. கையிலிருக்கும் ஒரு பணத் தாளில் இருந்து, விஜய் நிறைய பணம் வர வைக்கும் பொழுது. இரண்டாவதாக, நியூஸ் சேனல் வாசலில் நிற்கும் சமந்தாவிற்கு. பந்து பொறுக்கிப் போடும் தம்பி தான் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் எனத் தெரிய வரும் பொழுது. மூன்றாவதாக, கிராமத்தில் பெரிய மருத்துவமனைக் கட்டடத்தை டீன் எஸ்.ஜே.சூர்யா...
விவேகம் விமர்சனம்

விவேகம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் அஜித்தும், இயக்குநர் சிவாவும் மூன்றாம் முறையாக இணைகின்றனர். கிராமம், நகரம் என்று பயணித்தவர்கள், தேசிய எல்லைகளைக் கடந்து, Counter Terrorist Squad இல் பணிபுரியும் சர்வதேசக் காவலனாக அஜித்தை ப்ரோமோட் செய்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கும் நிழல் சமூகத்திற்கு விலைக்குப் போய் துரோகமிழைக்கிறார்கள் ஏஜென்ட் ஏ.கே.வின் நண்பர்கள். துரோகத்தில் இருந்து மீண்டு, நண்பர்களையும் பழி வாங்கி, உலகையும் எப்படிக் காக்கின்றார் என்பதுதான் படத்தின் ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை. அக்ஷரா ஹாசனின் அத்தியாயம் மிக அழகாய் வந்துள்ளது. நடாஷா என்ற பாத்திரத்தில் அவர் முகம் காட்டும் பதற்றம், அவரது ஹேர்ஸ்டைல், உடை என எல்லாமுமாகச் சேர்ந்து அற்புதமாய் உள்ளது. நடாஷா ஒரு ஹேக்கர் என்பதைக் கேள்விகளின்றி ஏற்க முடிகிறது. அவரைப் பிடிக்க, அஜித் செயல்படுத்தும் பிளான் 'பி (B)' ரசிக்க வைக்கிறது. குண்டு மழைக்கு நடுவில் அநாயாசமாய்ப் ...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் க...
பாயும் புலி விமர்சனம்

பாயும் புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை அதிகாரி ஒருவர், எப்படியெல்லாம் பாய்ந்து தன் கடமையைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அசிஸ்டெண்ட் கமிஷ்ணர் ஜெயசீலனாக விஷால். ஒரு எஸ்.ஐ.-இடம் தனது செயலுக்கான நியாயத்தை மிகவும் பொறுமையுடன் விளக்கும் நல்லவர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். படத்திலுள்ள அனைத்து வில்லன்களும் எத்தனை பேரைக் கொல்கிறார்களோ, அதை விட அதிகமான நபர்களை இவர் கொல்கிறார். சாரி, என்கவுண்ட்டர் செய்கிறார். இந்தப் படத்திற்கு ‘காவல் கோட்டம்’ என பெயர் வைக்கத் திட்டமிட்டு இருந்தனராம். சாலையைக் கடக்கப் பயப்படும் செளம்யாவாக காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கவர்ந்தது போல் கவரவில்லை. படத்தின் முதல் பாதியைக் காப்பாற்றுவது, படத்தோடு சம்பந்தமில்லாத காமெடி ட்ராக்கில் வரும், மனைவிக்குப் பயந்த கான்ஸ்டபிள் சூரிதான். இரண்டாம் பாதியைச் சுவாரசியப்படுத்துகிறார் தொழிலதிபர் செல்வமாக வரும் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவின் தவிர்...