Shadow

Tag: சினிமா விமர்சனம்

சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோக...
தமிழ்க்குடிமகன் விமர்சனம்

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்குள் ஒரு பெரிய வீட்டிற்குள் சாவு விழுந்துவிடுகிறது. அந்த ஊரில் பிணத்திற்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும், குடிமகன் என்று பொதுவாக அழைக்கப்படும் சின்னச்சாமி (சேரன்) கதாபாத்திரம் தனக்கு முன்பு நேர்ந்த அவமானகரமான நிகழ்வுகளால்,  பிணத்திற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் வெட்டியான் பணியை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து பிழைத்து வருகிறான்.  ஒட்டுமொத்த ஊரும் அவனை இறந்த பெரியவருக்கு இறுதிச்சடங்கு செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்த,  மிரட்ட, அந்தத் தொழிலை இனி தன் வாழ்நாளில் தான் ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சின்னச்சாமி திடமாக முடிவு செய்து ஒட்டு மொத்த ஊரையும் எதிர்த்து நிற்கின்றான். இதன் முடிவு என்ன ஆனது என்பதே இந்த தமிழ்க்குடிமகன் பேசும் அரசியல்.சமகால சமூக நிகழ்வுகளையும், சாதிய நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பார்க்கும் போது தமிழ்க்குடிமகன் ஒரு ...
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி ...
குஷீ விமர்சனம்

குஷீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு.  படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம்  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம்,  படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது,  படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை.  அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது.  இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது.  மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது,  சிவ நிர...
வான் மூன்று விமர்சனம்

வான் மூன்று விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வான் மூன்று. கவித்துவமான தலைப்பு. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது.  காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு யுவன் யுவதி பார்க்கும் ஒரு வானம்,  40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த இணை பார்க்கும் இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து தங்கள் இளமையை இனிப்போடு களிக்க விரும்பிய இணைக்கு குழந்தை வந்துவிட்டதோ என்று பயம், பரிசோதிக்க வந்த இடத்தில் மூளை பாதிப்பு என்று தெரிந்து பயம் கூட, இவர்கள் பார்ப்பது மூன்றாம் வானம்.இவை படத்தின் ஆரம்பக் காட்சிகள். இந்த முதல் பத்தியை படிக்கும் போதே அடுத்த என்ன நடந்திருக்கும் என்று கணித்திருப்பீர்கள்.  படத்தின்...