Shadow

Tag: சிறுத்தை சிவா

கங்குவா விமர்சனம்

கங்குவா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம். நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது. பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் தேசத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றன. பாரதத் தேசத்தைப் பிடிக்க, 25000 வீரர்களோடு அரசர் அரிலியஸின் ரோமானியக் கப்பற்படை வருகிறது. போருக்கு முன், பயிற்சி எடுக்க நிலம் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் கதை சரி. சிலுவைப் போர் தொடங்குவதற்கு முன்னான ஆரம்பகட்ட பூசல்கள் நிக...
விஸ்வாசம் விமர்சனம்

விஸ்வாசம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எவருக்கு எவர் மீது விசுவாசம் எனத் தெரியவில்லை. நான்காவது முறையாகத் தொடர்ந்து இணைகின்றனர் இயக்குநர் சிவாவும், அஜித்குமாரும். தனது மனைவி நிரஞ்சனா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, 10 வருடங்களாக தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழ்கிறார் தூக்குதுரை. மகளின் உயிருக்கு ஆபத்தெனத் தெரிந்து, அதிலிருந்து மகள் ஸ்வேதாவைப் பாதுகாக்க களமிறங்குகிறார் தூக்குதுரை. ஸ்வேதாவிற்கு யாரால் ஏன் ஆபத்து என்பதும், அதிலிருந்து எப்படி தன் மகளை மீட்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. வீரம் படத்தின் 2.0 என்றே சொல்லவேண்டும். வேஷ்டி சட்டையும், வெண் தாடி முடியும், இரண்டு படத்தின் அஜித்தின் உருவ அமைப்பிற்குப் பொருந்துவது மட்டுமல்லாமல், சொந்த ஊரில் அலப்பறையைக் கூட்டும் முதல் பாதி, நாயகியின் ஊரில் வில்லனிடமிருந்து மகளைக் காப்பாற்றும் இரண்டாம் பாதி என கதையிலும் பெரிய மாற்றமில்லை. ஆனால், வீரம் படத்தில் சந்தானத்துடன்...