Shadow

Tag: சிவகார்த்திகேயன்

நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது கனா திரைப்படம். தனது நண்பன் அருண்ராஜா காமராஜாவிற்காகப் படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். "அருண்ராஜா எழுதிய எல்லாப் பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுதச் சொன்னேன். அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதிட்டு வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்தப் படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிடக் கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாற...
ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

சினிமா, திரைச் செய்தி
‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “ஒரு குப்பைக் கதை” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வழக்கு எண் மனிஷா நடித்துள்ளார். பாகன் படத்தின் இயக்குநரான அஸ்லம், தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த காளி ரங்கசாமியை இயக்குநராக அறிமுகம் செய்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் மூலம், மே 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். மே 16 அன்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருட...
இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைத் துளி
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும் கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்? இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோ க்ரீன் ப்ரொடக்ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, 'சிவகார்த்திகேயன் 13' #SK13 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது....
ரெமோ லட்டு

ரெமோ லட்டு

சினிமா, திரைச் செய்தி
"என்னை இந்தப் படத்தில் நாயகியா நடிக்க வச்சா சரியா பொருந்தும்னு பரிந்துரை செய்தது பி.சி.ஸ்ரீராம் சார் தானென பாக்கி (பாக்கியராஜ் கண்ணன்) சொன்னார். அவருக்கு ரொம்ப நன்றி. எங்கப்பாம்மா என்னைச் சுலபத்தில் பாராட்டிட மாட்டாங்க. ஆனால், திரையரங்கில் ரெமோ பார்த்துட்டு “லட்டு மாதிரி இருக்க!” எனப் பாராட்டினாங்க. இந்தப் பாராட்டு, பி.சி.ஸ்ரீராம் சாரோட கேமிரா மேஜிக்கால் தான் நடந்தது” என்றார் ரெமோ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். “என்னிடம் படத்தைப் பற்றிப் பேசுறவங்க, அந்த பிங்க் சேலையில் ரொம்ப அழகா இருந்தீங்க. எங்க வாங்குனீங்க எனக் கேட்கிறாங்க. ‘அடப்பாவிகளா! அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி மேடமைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அக்கறையாகப் பார்த்துப் பார்த்து எனக்கு எது நல்லாயிருக்கும்னு உடை வடிவமைத்துக் கொடுத்த அவங்களுக்கு நன்றி. யாராச்சும் நான் அழகுன்னு சொன்னா ந...
ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

சினிமா, திரைச் செய்தி
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். “பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா! நாலாவது மைக்கும் இருக்கா?’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெரிஞ...
ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும் முயற்சியிலுள்ள எஸ்.கே. காதலில் வெற்றியடைய வேலையில்லா எஸ்.கே. எடுக்கும் தொடர் முயற்சிகள் தான் படத்தின் கதை. வழக்கமான ரோட் சைட் ரோமியோ தான் எஸ்.கே.வும். எதைப் பார்த்து ‘லவ்’ வந்தது என தமிழ்ப்பட நாயகனிடம் கேட்டால், ‘முகத்தைப் பார்த்து லவ் பண்ணலை. மனசைப் பார்த்து லவ் பண்ணேன்’ எனச் சொல்வார்கள். ‘ஏன் லவ் ஃபெயிலியர் ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இந்தப் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கவே முடில’ என பாரில் (Bar) பெண்களைத் திட்டிப் பாட்டு பாடுவார்கள். முதலில் என்ன புரிந்ததோ, பின் என்ன புரியாமல் போனதோ?? தமிழ்ப் பட இயக்குநர்களுக்கே வெளிச்சம்! ஆனால், இப்படத்தில் எஸ்.கே.விற்குக் காவ்யாவின் முகத்தைப் பார்த்தோ, மனதைப் பார்த்தோ காதல் வருவதில்லை. மன்மதன் (Cupid) அம்பெய்து காதல் வரச் செய்து விடுகிறார். அதுவரை பெண்கள் விஷயத்தில் எஸ்.கே. சின்னத் தம்பி பிரபு போல...
ரெமோ – படக்குழுவினர்

ரெமோ – படக்குழுவினர்

சினிமா, திரைத் துளி
நடிகர்கள்:>> சிவகார்த்திகேயன் >> கீர்த்தி சுரேஷ் >> சரண்யா பொன்வண்ணன் >> 'நான் கடவுள்' ராஜேந்திரன் >> யோகிபாபு >> நரேன் >> கல்யாணி நடராஜன் >> அன்சன் பால் >> பேபி ரக் ஷா >> பிரதாப் போத்தன் >> கே.எஸ்.ரவிக்குமார் >> மெளலி >> மயில்சாமி >> சுவாமிநாதன்பணிக்குழு:>> தயாரிப்பு நிறுவனம் - 24 ஏஎம் ஸ்டுடியோஸ் >> தயாரிப்பு - ஆர்.டி.ராஜா >> இயக்கம் - பாக்கியராஜ் கண்ணன் >> ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம் >> இசை - அனிருத் >> சவுண்ட் டிசைனர் - ரசூல் பூக்குட்டி >> படத்தொகுப்பு - ரூபன் >> கலை - T.முத்துராஜ் >> நடனம் - ராஜு சுந்தரம், பிருந்தா >> சண்டை - அனல் அரசு >> போஸ்டர் டிசைன் - டூனி ஜான் >> உடை வடிவமைப்பு - அனு பார்த்தச...
அக்டோபர் 7 – ரெமோ

அக்டோபர் 7 – ரெமோ

சினிமா, திரைத் துளி
'ரெமோ' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த கதைக்களம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. மேலும், அனிருத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள 'ரெமோ சிக்நேச்சர் தீம்' மற்றும் 'செஞ்சிட்டாளே' பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. "எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும் வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ, அதே போல் தான் எங்கள் ரெமோ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டுமொத்த படக்க...
ரெமோ – ஏன்? யார்? எப்படி?

ரெமோ – ஏன்? யார்? எப்படி?

சினிமா, திரைச் செய்தி
“ஒரு நல்ல டைட்டில சொல்றவங்களுக்கு 20,000 என அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் கிட்டச் சொன்னோம். ஒண்ணும் தேறலை. ‘ஐ-ஃபோன் 6 எஸ்’ தர்றோம் என்று கூடச் சொல்லிப் பார்த்தாச்சு. ‘நெருப்புடா’ பாடின நம்ம அருண்ராஜா காமராஜ்தான் ரெமோ எனத் தலைப்பைச் சொன்னார். ‘நல்லாயிருக்கே ஏன்?’ எனக் கேட்டதுக்கு, “அந்நியன்ல ரெமோவும் காதலுக்காக வேஷம் போட்டுப் போவார்” எனச் சொன்னார். எங்களுக்கும் ரோமியோ போல் கேட்ச்சியா டைட்டில் தேவைப்பட்டது. அதுவுமில்லாம ரெமோ ஆல்ரெடி சக்சஸான ஒரு பெயர்” என்றார் சிவகார்த்திகேயன். “இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் செகெண்ட் ஹீரோயின் தான். சிவகார்த்திகேயன் தான் ஃபர்ஸ்ட் ஹீரோயின்” என்றார் சதீஷ். அதை ஆமோதித்த கீர்த்தி சுரேஷும், “ஆம், சதீஷ் சொன்னாப்ல இந்தப் படத்தில் நான் செகண்ட் ஹீரோயின்தான். நான் இதுவரை யாரைப் பார்த்தும் இப்படி என் வாழ்க்கையில் பொறாமைப்பட்டதே இல்லை” என்றார். “மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்...
ரெமோவுடன் இணையும் ராஜா

ரெமோவுடன் இணையும் ராஜா

சினிமா, திரைத் துளி
இன்னும் ரஜினிமுருகன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தனது அடுத்த படத்திலும் அந்த இமேஜைத் தக்க வைக்க அவ்வெற்றி கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் ‘ரெமோ’ என தனது அடுத்த படத்தின் தலைப்பை ஈர்ப்பாக வைத்து விட்டு, படப்பிடிப்பிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். “இந்த வருட, பருவ மழையின் தொடக்கத்தின் பொழுதே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில், படத்தை முடிக்கும் முனைப்புடன் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தனது இளம் குழு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி வருகிறார்” என மகிழ்ச்சியாகச் சொன்னார் 24 ஏஎம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர்.டி.ராஜா. ரெமோ குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விசாகப்பட்டினம் கிளம்ப ஆயுத்தமாக உள்ள சூழலில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது அடுத்த தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர்.“நன்றாகத் தொடங்கப்ப...
ரஜினிமுருகன் விமர்சனம்

ரஜினிமுருகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் களமிறங்கியுள்ளது அக்குழு. வேலையும் கவலையும் இல்லாத ரஜினிமுருகன் எப்படி தன் தாத்தா சொத்தை விற்கின்றான் என்பதுதான் படத்தின் கதை. தோத்ரியும் ரஜினிமுருகனும் செய்யும் அலப்பறைகள் தான் படம். போதாக்குறைக்கு, இவர்களுடன் ஏழரை மூக்கனும் சேர்ந்து கொள்கிறார். தனி ஆவர்த்தனமாக ரஜினி வெறியராக வரும் வக்கீல் நீலகண்டனும் அசத்துகிறார். எனினும் படத்தின் நீளம் 159 நிமிடங்கள் என்பது இப்படத்திற்குச் சற்றே அதிகம். கதைக்குள் வில்லன் வலுவாக வந்த பின்னும், ‘வெயிட்’ எனச் சொல்லிவிட்டு காதலிக்கவும், பாட்டு பாடவும் போய் விடுகிறார் ரஜினிமுருகன். இந்தப் பொறுப்பற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். நாயகனால் காதலிக்கப்பட கீர்த்தி சுரேஷ். தோத்ரியாக வரும் சூரி படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். வேதாளம் படத்திலேற்ற பாத்திரத்தினைப்...
மான் கராத்தே விமர்சனம்

மான் கராத்தே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான வட்டத்திற்குள் உழலத் தொடங்கி விடுகிறது. அதுவும் சுவாரசியமின்றி. வெட்டியாய்ச் சுற்றித் திரியும் பீட்டருக்கு, வெண்ணெயால் செய்தது போலிருக்கும் யாழினி மீது காதல் வந்துவிடுகிறது. தானொரு பாக்ஸர் என பீட்டர் விட்டு யாழினியையும் காதலிக்க வைத்துவிடுகிறான். காதலுக்காக, பீட்டர் சொன்ன பொய் அவனை எங்கு கொண்...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர். சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் கூட இயக்குநரின் படம் என சொல்லலாம். ஆனால் இப்படம் பொறுப்பில்லாத போஸ்பாண்டியினுடையது. முந்தைய படத்தினை விட கொஞ்சம் நடிப்பிலும் மெருகேறியுள்ளார். அசட்டுத்தனமாக வழியும் ஒற்றை பாவனையிலிருந்து ஒருவழியாக மீண்டு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடனமும் ரசிக்க வைக்கிறது. அவர் இன...