Shadow

Tag: சிவகார்த்திகேயன்

பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு

பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு

சினிமா, திரைத் துளி
பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரொடக்சன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்தப் படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூடத் திரைப்படம் என்றால் பழைய நினைவுகளைக் குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்தத் திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது. இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை...
ஹீரோ விமர்சனம்

ஹீரோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜென்டில் மேன் 2 என்றே படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற நன்நோக்கமுடைய கொள்ளைக்காரன் சத்தியமூர்த்தியாக அர்ஜுன் வருகிறார். படத்தின் நாயகன் அவர் தான். ஸ்கூல் படிக்கும் பொழுது சக்திமான் தொடர் பார்த்து சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென ஆசைப்படுகிறான் சக்தி. வளர்ந்த பின்னும் அந்த ஆசை விடாமல் சக்தியைத் துரத்த, ஜென்டில் மேன் சத்தியமூர்த்தியின் உதவியுடன், ஒரு முகமூடி அணிந்து சூப்பர் ஹீரோவாகி விடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. தொழிலதிபர் மகாதேவாக அபய் தியோல். சத்தம் போடாத, பணம் சம்பாதிப்பதில் கண்ணாக இருக்கும் காரிய வில்லனாக அசத்துகிறார். ஆனாலும், க்ளைமேக்ஸில் அவரை வழக்கமான சோப்ளாங்கி வில்லனாக்கி, சூப்பர் வில்லனாகப் பரிணமிக்க வேண்டியவரைச் சாதாரண வில்லனாக்கி உச்சபட்ச அநியாயம் செய்துள்ளார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். கடல் நீரில் ஓடும் வாகனத்தைக் கண்டுபிடித்ததற்கான பேடன்ட் உரி...
நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான். சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே பா...
Mr. லோக்கல் விமர்சனம்

Mr. லோக்கல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நயன்தாரா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பட்டாளத்தை தன் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்திற்கு அத்தியாவசியமான கதையும் திரைக்கதையும் மட்டும், சென்னையின் நீர்ப்பஞ்சத்திற்கு நிகராய் வறண்டு போயுள்ளன. ராஜேஷ் படத்தில் கதையா முக்கியம்? நிச்சயமாக இல்லை தான். ஜாலியான வசனங்கள், தட்டுத்தடுமாறி நாயகியின் கடைக்கண் பார்வையைப் பெறத் துடிக்கும் நாயகனின் அலம்பல்கள், சின்னதாய் ஒரு ஃபேமிலி சென்ட்டிமென்ட் என தனது முதல் படத்தில் இருந்தே ஒரே ஃபார்மட்டை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். முதல் மூன்று படங்களில், அதைச் சுவாரசியமாகக் கொடுத்தவர், அதன் பின் ரொம்பவே தடுமாறத் தொடங்கிவிட்டார். அதன் உச்சமாக அமைந்துள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படம். விமானத்தில் ஜன்னலோர சீட் தராத ஃப்ரெஞ்சு பெண்மணியைப் பார்த்து, ...
மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்

மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்

சினிமா, திரைத் துளி
தரமான நகைச்சுவை ரகளை நிச்சயம் என்ற நம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டீசர். ஒரு டீசரை உருவாக்குவதற்கு நிறைய திறமையும் பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்குச் சரியாகச் சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதைக் காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு. ராதிகா சரத்குமார், தம்...
சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் "மிஸ்டர் லோக்கல்". "இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு "மிஸ்டர் லோக்கல்" என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில்தரும் சக்தி மிகவும் பாசிடிவ் ஆனது. அவரது எனர்ஜியைப் பார்க்கும் போது, அவருடன் போட்டிப் போடவேண்டும் என்கிற ஆசை ஒரு இயக்குநராக எழுந்தது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிகப் பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில்நுட்பக் கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது. 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் ...
கனா விமர்சனம்

கனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் 'கனா'க்கள் திரை கண்டுள்ளது. "விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க" என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை. கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ஆண...
சீமராஜா விமர்சனம்

சீமராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"முத்து, அருணாச்சலம், லிங்காலாம் பார்த்திருக்கீங்களா பங்கு? அதுல வர்ற மாதிரி நான் பெரிய பணக்காரனாவும், ராஜ பரம்பரையாவும் வரணும்" - சிவகார்த்திகேயன் "வர வச்சுடலாம்." - பொன்ராம் "எம்.ஜி.ஆர்., ராஜாவ நடிச்சு கத்திச்சண்டை போடுற படம்லாம் பார்த்திருக்கீங்க?" "ஓ.. பார்த்திருக்கேனே! சிறப்பா பண்ணிடலாம்." "ஐய்யோ பங்கு! அப்படிலாம் பண்ணிடாதீங்க. 'இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்டா!' என ஓட்டிடுவானுங்க மீம் பசங்க." - சி.கா "அப்ப ரஜினி மட்டும் போதுங்கிறீங்களா? ராஜா கெட்டப் வேணுமா?" - பொ.ரா "கண்டிப்பா வேணும் பங்கு. எம்.ஜி.ஆர். லெவலுக்குப் போனா வைவாங்க, அதுமில்லாம அது ரொம்ப ஓல்ட் ஸ்டைல். நாம சின்னதா பாகுபலி அளவுக்கு, ராஜமெளலி 'மஹாதீரா'ல வச்ச மாதிரி லேசா ராஜா சீனை வச்சுப்போம்." "சரி அப்படியே பண்ணிடலாம்." "முழுசா பாகுபலி மாதிரியும் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர். டச் கண்டிப்பா வேணும். நம்பியார் கிட்ட இருந்து ம...
சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்

சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே! அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக அவர்கள் இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்குப் பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்...
நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது கனா திரைப்படம். தனது நண்பன் அருண்ராஜா காமராஜாவிற்காகப் படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். "அருண்ராஜா எழுதிய எல்லாப் பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுதச் சொன்னேன். அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதிட்டு வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்தப் படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிடக் கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாற...
ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

சினிமா, திரைச் செய்தி
‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “ஒரு குப்பைக் கதை” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வழக்கு எண் மனிஷா நடித்துள்ளார். பாகன் படத்தின் இயக்குநரான அஸ்லம், தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த காளி ரங்கசாமியை இயக்குநராக அறிமுகம் செய்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் மூலம், மே 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். மே 16 அன்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருட...
இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைத் துளி
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும் கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்? இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோ க்ரீன் ப்ரொடக்ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, 'சிவகார்த்திகேயன் 13' #SK13 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது....