Shadow

Tag: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்

சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்

இது புதிது, சமூகம்
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ், அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையைப் பாராட்டிய சிவகார்த்திகேயன், ‘இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம்’ என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன்....
அமரன் விமர்சனம்

அமரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அமரன் என்றால் மரணமில்லாதவன் எனப் பொருள். வீரத்திற்காக அஷோக் சக்ரா விருது பெற்ற மேஜர் தெய்வத்திரு. முகுந்த் வரதராஜனை, தனது படத்தில் பாட்டுடைத் தலைவனாகயாக்கி, அமரனாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால், படம் அமரத்துவம் எய்துவது இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் அதி அற்புதமான நடிப்பாலேயே! சின்ன சின்ன உணர்ச்சிகளையும், முகத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அமரனை ஒரு காதல் படமாக மாற்றிவிடுகிறார். படத்தின் முதற்பாதியின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் முகுந்த் வரதராஜனின் அம்மா கீதாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம். லப்பர் பந்து படத்தில், கெத்து தினேஷின் அம்மாவாக நடித்து மனதில் நின்றவர், மீண்டும் ஒருமுறை பிரமாதப்படுத்தியுள்ளார். இரண்டு அம்மாக்களும் தான் எத்தனை வேறுபாடுகள் உடற்மொழியில், வசன உச்சரிப்பில்! ஒரு கட்டத்தில், தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன், இது போன்று தொடர்ந...
கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’ ஆகும். இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. கூழாங்கல் படம் பார்த்ததும் நாங்கள் வினோத்துடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும்” என்றார். படத்தொகுப்பாளர் கணேஷ் சிவன், “இது நம் ஊரின் ...
“காமெடியனால் உணர்வுப்பூர்வமாக நடிக்கமுடியும்” – சிவகார்த்திகேயன் | கருடன்

“காமெடியனால் உணர்வுப்பூர்வமாக நடிக்கமுடியும்” – சிவகார்த்திகேயன் | கருடன்

சினிமா, திரைச் செய்தி
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாள...
குரங்குப் பெடல் திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

குரங்குப் பெடல் திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்.தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்கொண்டு வருகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் குடும்ப அமைப்பு மற்றும் கனவுகள் பற்றிய ஒரு கூர்மையான ஆய்வு ஆகும்.இயக்...
#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்....
ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஆக்சன் எண்டர்டெயினர் பூஜையுடன் துவங்கியது

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஆக்சன் எண்டர்டெயினர் பூஜையுடன் துவங்கியது

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், யில் உருவாகும் புதிய திரைப்படம்,  ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. ...
அயலான் விமர்சனம்

அயலான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நெடுநாளாக புரொடெக்‌ஷனில் இருந்து, படம் வெளியாகுமா இல்லை கைவிடப்படுமா என்பதான சந்தேகங்கள் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, அவைகளை வெற்றிகரமாக கடந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கிறார் அயலான்.  ‘இன்று நேற்று நாளை’ என்கின்ற அறிவியல் புனைவு கதையை தன் முதற்படமாக செய்து பெரும் வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படம். சிவகார்த்திகேயன் நடிப்பில்  பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்தப் படம் என்று படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்  பூர்த்தி செய்திருக்கிறதா…? என்று பார்ப்போம். ஏலியன்ஸ் வகை திரைப்படம் என்றாலே வழக்கமான, அதற்கென்றே அளவெடுத்து தைத்தார் போன்ற ரெடிமேட் திரைக்கதை ஒன்று உண்டு. அதுயென்னவென்றால் ஏலியன்கள் பூமியை தாக்கி அழிக்க வருவார்கள். ந...
மாவீரன் விமர்சனம்

மாவீரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மண்டேலா என்னும் மகத்தான க்ளாசிக் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படம். டான், ப்ரின்ஸ் என தரை லோக்கல் அளவிற்கு காக்டெயில் கமர்ஷியல் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என இவர்கள் இருவரின் இணைவையும் ஒட்டு மொத்த திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாடே உற்றுப் பார்த்தது. படம் மாஸாக வருமா, க்ளாஸாக வருமா என இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தான் மாவீரன். ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படம் இல்லை. ஏனென்றால் சூப்பர் ஹீரோ செய்யும் எந்தவொரு செயலையும் மாவீரன் செய்வதில்லை. நம்மூர் ஹீரோக்கள் செய்யும் வேலையைத் தான் செய்கிறார். ஏதோ குரல் கேட்கிறது குரல் கேட்கிறது என்று டிரைலரில் வருவதை வைத்துப் பார்த்தால் ஒரு வேளை உளவியல் சம்பந்தமான திரைப்படமாக இருக்குமோ என்...
ப்ரின்ஸ் விமர்சனம்

ப்ரின்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழ்சினிமாவிற்கே பெரும் எனர்ஜி கொடுத்தபடம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர். அதன் பிறகு டான் படத்திலும் வசூல்வேட்டை ஆடினார் சிவகார்த்திகேயன். அடுத்து அவரது நடிப்பில், ப்ரின்ஸ் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு இருந்தது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே வைத்து எழுதப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை நிறைய படங்களாக வந்திருக்கிறது. இருப்பினும் திரைக்கதையை ரசிக்கும்படி உருவாக்கியுள்ளார் இயக்குநர் அனுதீப். கடலூர் மாவட்டம் தேவகோட்டை என்ற ஊரில் பள்ளியில் சோஷியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு நல்ல ஆசிரியர் இல்லை என்பதை ஓரிரு காட்சிகளிலே கவனப்படுத்தி விடுகிறார்கள். சிவகார்த்திகேயன் வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியையாக வருகிறார் பிரிட்டிஷ் மரியா. இருவரும் காதலில் விழுகிறார்கள். இவர்கள் காதலுக்கு சத்யராஜின் எதிர்ப்போடு சேர்த்து மேலும் ...
“ப்ரின்ஸ்: எனது முதல் தீபாவளி படம்” – சிவகார்த்திகேயன்

“ப்ரின்ஸ்: எனது முதல் தீபாவளி படம்” – சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘ப்ரின்ஸ்’ திரைப்படம். சென்னையில் நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ’‘இந்த ‘ப்ரின்ஸ்’ படம் மிகவும் சிம்பிளான கதை. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட்தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்ட்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம். அனுதீப் தெலுங்கில்தான் சிந்திப்பார். அந்தக் காமெடியைத் தமிழுக்கு மாற்றிக் கொண்டு வர வேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்துப் பார்க்க்க் கூடாது என நினைத்தோம். தம...
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ – தீபாவளி வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ – தீபாவளி வெளியீடு

சினிமா, திரைத் துளி
டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘ஜெஸ்ஸிகா’வும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகப் படம் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெள...
டாக்டர் விமர்சனம்

டாக்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நோயாளிகளைக் காப்பாற்ற அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் மருத்துவர், ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்ள நேருகிறது. தன்னை வேண்டாம் என்ற நிராகரித்த பெண்ணின் வீட்டில் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அந்த வீட்டிற்கு சிவகார்த்திகேயன் உதவச் செல்கிறார். ஆனால் கடத்தப்பட்டிருப்பது ஒரு குழந்தை அல்ல பற்பல எனத் தெரிய வருகிறது. அவர்களை எல்லாம் சிவா எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை. ஸ்மார்ட்டான சிவகார்த்தியன், துளியும் அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட பன்ச் வசனம் வைக்கவில்லை. சிறப்பு. பிரியங்கா அருள்மோகன் அழகோ அழகு. அவரையும் சரியாகக் கதைக்குள் பொருத்தி இருப்பதால் அவர் கொஞ்சமே நடித்தாலும் நன்றாகவே இருக்கிறது. கிங்ஸ்லியும் யோகிபாபுவும், டாக்டர் படத்தின் திரைக்கதைக்கு அனுபவம் வாய்ந்த செவிலியர்களாக இருந்து படத்தைக் காப்பாற்றுகிறார்கள். வினய் நடிப்பும் சரி அவரது மே...
டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா

டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா

சினிமா, திரைச் செய்தி
KJR ஸ்டுடியோஸ் மற்றும் SK ப்ரொடக்ஷன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில், ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. டாக்டர் படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி J.ராஜேஷ், “டாக்டர் திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்தத் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது. டாக்டர் திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அப்போதும் டாக்டர் திரைப்படத்தைப் பெரிய ...