Shadow

Tag: சுரேஷ் சந்திரா

விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல்

விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல்

சினிமா, திரைத் துளி
இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும் தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது.....அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் - தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய 'விழித்திரு' படத்தின் 'STAY AWAKE' பாடலை துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார். "என்னைப் பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் மூத்த நபர் அபிராமி ராமநாதன் அவர்கள் துபாயில் 'நட்சத்திர கலை விழா' என்னும் விமர்சையான கலை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். ஒட்டுமொத்த துபாயும் அன்றிரவு நட்சத்திரங்களின் வருகையால் 'விழித்திரு' க்கும். அப்படி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் எங்களின் 'விழித்திரு’ பாடலை வெளியிட வேண்டும் என்று தான் நான் பல நாட்கள் யோ...
இமைக்க விடாப் படம்

இமைக்க விடாப் படம்

சினிமா, திரைத் துளி
சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும். இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா - நயன்தாரா - ராசி கண்ணா - பிரபல வில்லன் அனுராக் காஷ்யப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'. 'டிமான்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் சி.ஜெ.ஜெயக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாக இருக்கின்றது. "தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் முக்கி...
அம்மணி விமர்சனம்

அம்மணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாத்தனங்கள் அற்ற மீண்டும் ஓர் ஆரோகணத்தைத் தந்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஜீ தமிழ்' சேனலில் தொகுத்தளித்த 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையால் கவரப்பட்டு, இப்படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி. கைக்குக் கை மாறும் 'மணி (money)' இருக்கே, அம்மணி மீதே படத்தின் கதாபாத்திரங்களுக்கு கண். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உடைய ஒவ்வொரு குடும்பமும் காலங்காலமாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது அம்மணி படம். அரசு மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளியாக இருக்கும் சாலம்மாவிற்குக் கணவரில்லை. அவரது மூத்த மகனுக்கு 10 வயது இருக்கும் பொழுதே அவரது கணவர் இறந்து விடுகிறார். மகளோ ஒரு ரெளடி எனப் பெயரெடுத்த அடாவடியான ஆளுடன் ஓடி விடுகிறாள்; மூத்த மகனோ குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்; இளைய மகனோ மனைவியின் பேச்சிற்கு ஆடும் ஆட்டோ...
ரெமோ லட்டு

ரெமோ லட்டு

சினிமா, திரைச் செய்தி
"என்னை இந்தப் படத்தில் நாயகியா நடிக்க வச்சா சரியா பொருந்தும்னு பரிந்துரை செய்தது பி.சி.ஸ்ரீராம் சார் தானென பாக்கி (பாக்கியராஜ் கண்ணன்) சொன்னார். அவருக்கு ரொம்ப நன்றி. எங்கப்பாம்மா என்னைச் சுலபத்தில் பாராட்டிட மாட்டாங்க. ஆனால், திரையரங்கில் ரெமோ பார்த்துட்டு “லட்டு மாதிரி இருக்க!” எனப் பாராட்டினாங்க. இந்தப் பாராட்டு, பி.சி.ஸ்ரீராம் சாரோட கேமிரா மேஜிக்கால் தான் நடந்தது” என்றார் ரெமோ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். “என்னிடம் படத்தைப் பற்றிப் பேசுறவங்க, அந்த பிங்க் சேலையில் ரொம்ப அழகா இருந்தீங்க. எங்க வாங்குனீங்க எனக் கேட்கிறாங்க. ‘அடப்பாவிகளா! அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி மேடமைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அக்கறையாகப் பார்த்துப் பார்த்து எனக்கு எது நல்லாயிருக்கும்னு உடை வடிவமைத்துக் கொடுத்த அவங்களுக்கு நன்றி. யாராச்சும் நான் அழகுன்னு சொன்னா ந...
ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

சினிமா, திரைச் செய்தி
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். “பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா! நாலாவது மைக்கும் இருக்கா?’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெரிஞ...
சென்னையில் திருச்சூர்: ஆவணிப் பூவரங்கு

சென்னையில் திருச்சூர்: ஆவணிப் பூவரங்கு

சமூகம்
அன்றும், இன்றும், என்றென்றும் நம் தமிழ் மக்களுக்கும், மலையாள மக்களும் இடையே ஓர் வலுவான சகோதர உறவு நீடித்து வருகிறது. மொழி மற்றும் கலாச்சாரத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும், அந்த சகோதர உறவால் நாம் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம். வருகின்ற அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதி 'தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்' சார்பில் நடத்தப்பட இருக்கும் 'ஆவணிப்பூவரங்கு' திருவிழாவே அதற்கு சிறந்த உதாரணம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்த திருவிழா, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தகவலை நேற்று 'தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பு'-இன் சார்பில் ஸ்ரீ எம்.பி.புருஷோத்தமன் (கௌரவ தலைவர் - CTMA ), ஸ்ரீ கோகுலம் கோபாலன் (நிறுவனர் - CTMA), ஸ்ரீ எம்.எ.சலீம் (தலைவர் - CTMA), ஸ்ரீ வி.சி. பிரவீன் (நிறுவனர் - ஆவணிப் பூவரங்கு) மற்றும் டாக்டர் எ.வி.அனூப் (நி...
இர்ஃபான் இன் இன்ஃபர்நோ

இர்ஃபான் இன் இன்ஃபர்நோ

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான 'டாவின்சி கோட்' மற்றும் 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்' திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்ஃபான் கான் நடித்திருக்கும் 'இன்ஃபர்நோ' திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை இந்த 'இன்ஃபெர்நோ' திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. ஓர் இந்திய நடிகர் உலக புகழ் பெற்ற டாம் ஹான்க்ஸோடு இணைந்து ஹாலிவுட் படத்தில் பணியாற்றி இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்கும் பெருமை அன்றோ? "இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவர் இர்ஃபான் கான் என்பதை நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஹிந்தி சினிமா தற்போது துடிப்பான திரையுலகமாக மாறி இருப்பதைப் பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இர்ஃபான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர்...
கேமியோ – அதர்வா – ராஷி

கேமியோ – அதர்வா – ராஷி

சினிமா, திரைத் துளி
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பிக் கொண்டு வருகிறோம். முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாகச் செயல்படுவது கதைக்களம் தான். அந்தக் கதைக்களத்தைத் தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்குக் கூடுதல் பலம். சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களைப் போல இந்தப் படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது.இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அ...
தேவி தமன்னா

தேவி தமன்னா

சினிமா, திரைச் செய்தி
தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?' "ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?" என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று 'வுட்'களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் வி...
இது உலக சினிமா செல்லம்

இது உலக சினிமா செல்லம்

சினிமா, திரைச் செய்தி
இன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக இருக்கும் சூழலில், அந்நோய் பற்றிப் போதிய விழிப்புணர்வு இங்கில்லை. அதை மையமாக வைத்து, எட்டுக் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மருத்துவமனையைச் சுற்றி நிகழும் படமாக ‘சில சமயங்களில்’ படம் உள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகளுக்காகப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. அதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி திரையிடப்படுகிறது. வாக்கெடுப்பில் சிறந்த பத்து அயல் மொழிப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகுமென படக்குழுவினர் நம்பிக்கையோடு உள்ளனர். ஆஸ்கர் லட்சியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். ரசிகர்களுக்குத் திரையிடப்படும் முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை அள்ளுமென்றும் திண்ணமாக உள்ளனர். “நான் நடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்கணும் என்றால் என் கணவரும், புகுந்த வீட்டினரும் ஒத்...
விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் – எஸ்.டி.ஆர்

விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் – எஸ்.டி.ஆர்

சினிமா, திரைத் துளி
‘இனி என் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்படாது’ என சிம்பு ஆவேசப்பட்டதாக ஒரு தகவல் சமூக தளங்களில் வேகமாகப் பரவியது. அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார் சிலம்பரசன். அன்பு நண்பர்களே, தற்போது நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல. சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் ப...