“எனக்கு 90 வயதாகிறது” – சீனிபாட்டி | பேச்சி
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இயக்குநர் B.ராமச்சந்திரன், “பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காகத்தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்குப் போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான...