ஜுங்கா விமர்சனம்
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணையும் படம். இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் வரும் டான் ஜுங்கா தான் கஞ்சமே தவிர, படத்தின் பிரம்மாண்டத்திற்காக விஜய் சேதுபதி தாராளமாகவே செலவு செய்துள்ளார்.
ஜுங்காவிற்கு, விற்கப்பட்ட 'சினிமா பாரடைஸ்' எனும் தனது தாய் வழி பூர்வீக சொத்தான திரையரங்கினை மீண்டும் வாங்கவேண்டும் என்று ஆசை. ஆனால், திரையரங்கத்தை விற்க மறுத்துவிடுகிறார் கோடீஸ்வரச் செட்டியார். லிங்கா, ரங்கா என்ற பாரம்பரிய டான் ஃபேமிலியில் வந்த ஜுங்கா, திரையரங்கை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
டான் படங்களைக் கலாய்க்கும் ஸ்பூஃப் மூவியாகப் படம் தொடங்குகிறது. திடீரெனச் சீரியசாகி, பின் ஸ்பூஃபாக, சீரியஸ், ஸ்பூஃப் எனப் படம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் 157 ந...