Shadow

Tag: தியாகராஜன்

“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

சினிமா, திரைச் செய்தி
ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் ஃபெப்ஸியின் தலைவரும், அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர். இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது, “பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'அந்தகன்' திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகிப் பெரிய வெ...
செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களை...
வாய்மை விமர்சனம்

வாய்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாய்மை – உண்மை தவறாத நிலை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்தின் முடிவாகும். கோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், ...