Shadow

Tag: துருவ் விக்ரம்

விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, போராடும் போராட்ட கதை

விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, போராடும் போராட்ட கதை

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது.கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, '...
“போராட்டம் தரும் உற்சாகம்” – விக்ரம் | கோப்ரா

“போராட்டம் தரும் உற்சாகம்” – விக்ரம் | கோப்ரா

சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திரப் பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெள...
50வது நாளில் மகான் – நெகிழ்ச்சியில் விக்ரம்

50வது நாளில் மகான் – நெகிழ்ச்சியில் விக்ரம்

சினிமா, திரைத் துளி
‘நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு செத்துடணுங்கிற வாழ்க்கையா இருக்கக்கூடாது. ஒரு வாழ்க்கை. வரலாறா வாழ்ந்திடனும்.' - காந்தி மகான்.வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியைத் தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று நினைக்கும்போது, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. சோஷியல் மீடியாவில் ரீல்ஸ், மீம்ஸ், டிவீட்ஸ் & மெஸெஜெஸ் வாயிலாக மகானைக் கொண்டாடிய அனைவரின் அன்பையும் ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது. இதை என்றும் அன்புடனும் பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன். அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானைக் கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜ...
மகான் விமர்சனம்

மகான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காந்தியக் கொள்கைகளின்பால் பிடிப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், நாயகனுக்கு ‘காந்தி மகான்’ எனப் பெயர் வைக்கப்படுகிறது. அச்சிறுவனின் முதுகு தோள் உரிக்கப்பட்டு காந்தியக் கொள்கைகள் திணிக்கப்படுகிறது. உள்ளூற உணர்ந்து, விருப்பத்துடன் இல்லாமல் கடமைக்கெனக் காந்தியத்தைக் கடைபிடிக்கப்படுவதால் ஏற்படும் அழுத்தம், ஒருநாள் நீர்க்குமிழி போல் வெடிக்கிறது. அதன் பின் காந்தி மகான் வாழ்க்கை எதிர்பாராத திசையில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. அவ்வெள்ளத்தைத் தடுக்கும் அணையாக, மகானின் மைந்தன் ‘தாதா’பாய் நெளரோஜி வந்து சேருகிறான். காந்தியக் கொள்கைகளைத் தூக்கி அவன் முதுகிலும் வைத்து வளர்த்து விடுகிறார்கள். காந்தியத்தைச் சுமக்க முடியாமல் தவிக்கும் தாதா, வன்முறையில் அதற்கான வடிகாலைக் காணுகிறான். பெருங்கோபத்தோடு வரும் தாதாவை, மகான் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில், காந்தியத்தை ம...
மகான் – தந்தை மகனின் அதிரடிப் பயணம்

மகான் – தந்தை மகனின் அதிரடிப் பயணம்

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சீயான் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கப்பட்ட ஒருவரின் கதையே மகான். அவர்...
“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை

“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை

சினிமா, திரைச் செய்தி
அறிமுக கதாநாயகனான துருவ் விக்ரம், "ஆதித்யா வர்மா படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்திக் கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இசையமைப்பாளர் ரதன் உழைப்பு மிகப் பெரியது. கிரிசாயா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் (படத்தில் நண்பனாக நடித்தவர்) முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா (படத்தின் இணை இயக்குநர்) நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூடப் படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாகச் செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப் படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எஃபெர்ட் தான் படமே. அவர்...
ஆதித்ய வர்மா விமர்சனம்

ஆதித்ய வர்மா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து, 2017 இல் வெளிவந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தின் தமிழ் ரீமேக்காய் வந்துள்ளது ஆதித்ய வர்மா. விக்ரம் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்துள்ள படமிது. விக்ரமிற்கு, ‘ப்ரேக்’ கொடுத்த படம், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’. ஒரு பிராமணப் பெண்ணை உருகி உருகிக் காதலிக்கும் கோபக்கார இளைஞனான சேதுவிற்கும் இப்படத்திற்கும் ஓர் ஒற்றுமையுண்டு. முக்கியமானதொரு வேற்றுமையும் உண்டு. அது, சேது படத்திலுள்ள நேட்டிவிட்டி இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இவன் தான் நாயகனென உள்வாங்கிக் கொள்ள சிரமமாக உள்ளது. முக்கியமாகப் படத்தின் முதற்பாதி ஒட்டாமல் மிக அந்நியமாக உள்ளது. இரண்டாம் பாதியும் ஸ்லோவாகப் போனாலும், நாயகனின் வலியையும் காதலையும் தன் அநாயாசமான நடிப்பால் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். வசனங்களை மிகக் கவனமாகக் காது கொடுத்து கேட்டாலன்றி முழுவதுமாகப் புரியவில்லை. சட்டெ...