பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'பிரபாஸ்ஹனு', ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது.
கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக 'பிரபாஸ் ஹனு' எனும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். இந்தக் கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதால், இந்தப் படைப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் பிரம்மாண்டமான பங்களிப்புடன் உருவாகும் இந்த #பிரபாஸ் ஹனு படைப்பின் மூலம், சினிமா ரசிகர்களுக்கு இதற்கு முன் கிடைத்திராத புதிய அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது .
ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும், நம் ...