Shadow

Tag: மாயோன் திரைப்படம்

பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

சினிமா, திரைச் செய்தி
சென்ற ஆண்டு சிபிராஜ் நடிப்பில்,  டபுள் மீனிங் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான “மாயோன்” திரைப்படம் திரைப் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.  நல்ல கதையம்சத்துடன் பொழுதுபோக்கிற்கான விசயங்களை உள்ளடக்கி இருந்த காரணத்தால் குடும்பம் குடும்பமாக  இப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் வந்தனர். மேலும் 47-வது கனடா டொரண்டோ திரைப்பட விழாவில் புராண இதிகாசப் பிரிவில் “மாயோன்” திரைப்படம் விருதினையும் வென்றது. படத்திற்கு இசையானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பெரும் பலமாக அமைந்திருந்தன.விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  கதை, அதைக் காட்சிப்படுத்திய அழகியல் போன்ற காரணங்களுக்காகவும் அதன் உள்ளடக்கத்திற்காகவும் ,  புராண இதிகாச த்ரில்லர் வகைத் திரைப்படம் என்கின்ற புதுமையான வகைமைக்காகவும் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தனித்து...
மாயோன் – டொரன்டோ சர்வதேச விழாவில் விருது

மாயோன் – டொரன்டோ சர்வதேச விழாவில் விருது

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித்  தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த திரைப்படம் மாயோன். கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பப்ரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் (Twitter Stats) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆன்மிகத்தையும் அறிவியலையும் ஒரு சேர இணைத்துப் பேசிய இந்தப் படம் கனடாவில் இந்த ஆண்டு  நடைபெற்ற  47ஆவது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வெ...
மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம்

மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம்

சினிமா, திரைத் துளி
புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாகத் திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. அறிவியலும் புராதனமும் கலந்து கட்டிய திரைக்கதை, அட்டகாசமான இசை, கண்ணைக் கவரும் பிரம்மாண்ட கலையமைப்பு முதலியன மாயோன் படத்தின் சிறப்புகள். மாமனிதன், வேழம் படங்களுடன் “மாயோன்” திரைப்படம் வெளியானது. மற்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்...
மாயோனையும், பக்ரீத பண்டிகையையும் இணைக்கும் நிலா

மாயோனையும், பக்ரீத பண்டிகையையும் இணைக்கும் நிலா

சினிமா, திரைத் துளி
‘ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம்’ எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக மாயோன் திரைப்படக்குழு, “பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களைக் கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. “மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு, ஓர் அழகான தொடர்பு உண்டு அது தான் நிலா” என்று தயாரிப்பு நிறுவன டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. தேசமெங்கும் அன்பைப் பரப்புவோம் என்பதை முழக்கமாக முன்னெடுக்கும் விதமாக பக்ரீத் பண்டிகையை அனைவரும் அன்போடு கொண்டாடுவோம் என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாயோன் படக்குழ...
மாயோன் விமர்சனம்

மாயோன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாயோன் மார்பினன் மணிகள் வைத்தபொற் பெட்டியோ வானோர் உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளே யாதென உரைப்பாம். - நகரப்படலம், பாலகாண்டம், கம்ப ராமாயணம் மாயோன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. அவர், முல்லை நிலக்கடவுள் என பண்டைய தமிழர்களால் இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், மாயோன் மலையிலுள்ள பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோயிலின் தொன்மத்தைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. பாவைக் கூத்தாகவும், அனிமேஷன் உதவியாலும், அக்கோயில் வரலாறு பற்றிய ஐதீகத்தையும் நம்பிக்கையையும் அழகாகக் கதையின் களமாக அமைத்துள்ளனர். இவையே தனிக்கதையாக ரசிக்கத்தக்கும் அளவு, இளையாராஜாவின் இசையோடு கை கோர்த்து ஓர் அடர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. தொன்மத்திலுள்ள அழகியல், மையக் கதையான ரகசிய அறை பொக்கிஷம், களவாட நினைக்கும் இத்தாலிய வில்லன் என்பதையெல்லாம் இரண்டாம் பட்சமாக்கிவிடுகிறது. தொன்மத்தைத் திரையில் கடத்த த...
மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

சினிமா, திரைச் செய்தி
டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் (Double Meaning Production) சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்” ஆகும். புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பரவலான கவனத்தை ஈர்த்தது. ராமாபுரம் SRM கல்லூரியில், படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் விஷ்ணு சிலை வைக்கப்பட்டு ரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவினில் இந்த ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நம் பாரம்பரிய ...
மாயோன் | கமலின் கடவுள் குறித்த கேள்விக்குப் பதில்

மாயோன் | கமலின் கடவுள் குறித்த கேள்விக்குப் பதில்

சினிமா, திரைத் துளி
பதினான்கு வருடங்களுக்குப் பிறகு, ‘கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்’ என தசாவதாரத்தில் கமல் பேசிய வசனத்திற்குப் பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ். ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாயோன்”. படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்குப் பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.இந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அ...
மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி

மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி

சினிமா, திரைத் துளி
அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. தற்போது அந்நிறுவனத்தின் 'மாயோன்' படம் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில், அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக 'மாயோன்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பெரிய திரையில் முழு அனுபவத்தைப் பெறுவதற்காகத் தற்போது படக்குழு 'ஆடியோ விளக்க' பாணியிலான திரைப்படப் பதிப்பில் ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் 'மாயோன்' படத்தின் திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீகப் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். மாயோனுக்கு 'யு' சான்றிதழ் ...
கிருஷ்ணர் ஆன்த்தம் – தமிழர் திருநாள் இசைப் பரிசு

கிருஷ்ணர் ஆன்த்தம் – தமிழர் திருநாள் இசைப் பரிசு

Songs, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்குப் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்தப் படத்தில் இடம்பெறும் 'சிங்கார மதன மோகனா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத...
மாயோன் – பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்

மாயோன் – பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்

சினிமா, திரைத் துளி
தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'அகண்டா'. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பிரக்யா ஜெய்ஸ்வால், பூர்ணா, ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியிட்ட தேதி முதல் வசூலில் சாதனை படைத்து வருவதற்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளும் காரணம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இந்...
மாற்றுத் திறனாளிகள் தினம் – ‘இன்ஸ்பயரிங்’ மாயோன்

மாற்றுத் திறனாளிகள் தினம் – ‘இன்ஸ்பயரிங்’ மாயோன்

சினிமா, திரைத் துளி
இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'மாயோன்' படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இது தொடர்பாக படத்தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ''மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்! நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத் திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலிக் குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். நாம் அனைவரும் நம்முள் பல 'இயலாமை'களையும், 'அச்சங்'களையும் ...