Shadow

Tag: மிர்ச்சி சிவா

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஷங்கர் எனும் முரட்டு சிங்கிளிற்கும், சிம்ரன் எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் செயலிக்குமான ரிலேஷன்ஷிப்பைப் பற்றிப் பேசுகிறது படம். அத்தகைய பந்தம் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை. எந்திரன் படத்தில், சிட்டி ரோபாவிற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வரும், இங்கே மிர்ச்சி ஷிவா மீது உருவமற்ற செயலியான சிம்ரனிற்குக் காதல் வருகிறது. சிம்ரன் என்பது மொபைலில் இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒரு செயலியின் (App) பெயர். ஷங்கர் என்பவன் உணவினை டெலிவரி செய்யும் ஸ்னிக்கியில் வேலை பார்ப்பவன். எதிர்பாராதவிதமாக சோதனை ஓட்டத்திலுள்ள மொபைல் ஒன்று ஷங்கருக்குக் கிடைக்கிறது. தன் மொபைல் ஓனரைக் காதலிப்பதுதான் அந்தச் செயலியின் வேலை. சிம்ரன், ஷங்கருக்கு யோசனைகள் சொல்லி அவனைக் கோடீஸ்வரனாக்குகிறாள். ஷங்கருக்கோ, துளசி மீது காதல் வருவதால், சிம்ரனிடம், ‘நீ வெறும் மொபைல்’ எனச் சொல்லிவிடுகிறான். சிம்ரன், அழிக்கும் நிலைக்குச...
மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி

மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி

சமூகம்
சமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது. 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர். ''தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடிக் கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையா...
மசாலா படம் விமர்சனம்

மசாலா படம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விமர்சனம் என்ற பெயரில், தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் முடியும் முன்பாகவே, கிழிக்கிழி எனக் கிழிக்கும் பதிவர்களையும் (Bloggers), ஃபேஸ்புக் பயனர்களையும், ட்வீட் போடுபவர்களையும் பகடி செய்வது போல் தொடங்குகிறது படம். இணைய விமர்சகர்களைக் கலாய்த்து ஒரு படமா? அடடே.. ‘செத்தான்டா சேகர்’ என விமர்சகர்களுக்காக உச்சுக் கொட்டும்போது ட்விஸ்ட் வைத்து விடுகின்றனர். அங்கே ‘கட்’ செய்தால் இடைவேளை. படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே இடைவேளை வந்துவிட்டதே என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தின் மொத்த நீளமே 110 நிமிடங்கள்தான். ஆறு மாதத்துக்குள் ஒரு கதை சொல்லவேண்டும் என விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் ஒரு சவால் விடுக்கிறார். அந்தக் கதையை, பெரிய ஹீரோ பெரிய இயக்குநர் வைத்து தயாரிப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார். இரண்டாம் பாதியில், விமர்சகர்களின் கதைத் தேடலில் படம் தொடங்குகிறது. கதையில் எதார்த்தம் வேண்டும...