பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்
ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ‘பரோஸ்’, திவரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர் பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். 'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் செய்துள்ளார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில் பேசிய வசனகர்த்தா ஆர் பி பாலா, “மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு ...