Shadow

Tag: யுவராஜ்

மைக்கேல் – சந்தீப் கிஷனின் ஆக்ஷன் அவதாரம்

மைக்கேல் – சந்தீப் கிஷனின் ஆக்ஷன் அவதாரம்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன், பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுட...
“சாணிக்காயிதத்தின் பயணம்” – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

“சாணிக்காயிதத்தின் பயணம்” – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

சினிமா, திரைச் செய்தி
சாணிக்காயிதம் பயணம் ஒரு சிறு கருவுடன் தொடங்கியது. அது நான்கு நாட்களில் உருவாகியது. மனித இயல்பைப் பற்றிய அடிப்படை புரிதல்தான் இந்தப் படத்தின் முக்கிய சாராம்சம் ஆகும். பழிவாங்கும் கதைக்களமான ராக்கி திரைப்படத்தில் இருந்தே, அருண் மாதேஸ்வரன் பழிவாங்கும் கதையை மூன்று பகுதியாய் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்த சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “தமிழ்த் திரையுலகில் பழிவாங்கும் கதைகள் புதியதல்ல. ஏற்கனவே மில்லியன் கணக்கில் இந்த மாதிரி கதைகள் வந்துள்ளன. இருப்பினும், சாணிக்காயிதம் மற்றும் எனது முந்தைய படமான ராக்கியில் காட்டப்படும் யதார்த்தத்தின் அம்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவகையில் புதியது. மற்ற படங்களில் காட்டப்படும் வன்முறை ஸ்டைலாக இருக்கும், அதிலிருந்து இந்தப் படம் மாறுபடும். சாணிக் காயிதம் திரைப்படம்...
குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

OTT, Teaser, Web Series, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர். ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரைப் பிரபலப்படுத்துவதற்காகக் குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பன்ச்சு’ என்ற வித்தியாசமான உத்தியைக் கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்...
கூகுள் குட்டப்பா விமர்சனம்

கூகுள் குட்டப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ எனும் மலையாளப் படத்தினைத் தமிழில் மீள் உருவாக்கம் செய்து இயக்கியுள்ளனர் இயக்குநர்களான சபரியும் சரவணனும். பிக்பாஸ் புகழ் தர்ஷனும் லாஸ்லியாவும் அறிமுகமாகியுள்ளனர். தெனாலிக்குப் பிறகு, கே.எஸ்.ரவிகுமாரின் RK செல்லூலாய்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் இரண்டாவது படமிது. படம் தொடங்குவதற்கு முன் முறையாக அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார். மகனை வெளியூருக்கு அனுப்ப விரும்பாத தந்தை சுப்ரமணிக்கும், வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் மகன் ஆதிக்கும் நடக்கும் பாசப்போராட்டத்தில் படம் தொடங்குகிறது. தன் லட்சியத்தில் உறுதியாக இருந்து வெளிநாடு செல்லும் ஆதி, தந்தைக்கு உதவியாக ஒரு ரோபாவை ஹோம் நர்ஸாகப் பயன்படுத்திக் கொள்ள தருகிறான். முதலில் ரோபோவை வெறுக்கும் சுப்ரமணி, போகப் போக ரோபோவைத் தன் மகனாகப் பாவிக்கத் தொடங்கி விடுகிறார். ரோபோவின் சோதனை ஓட்ட காலம் ம...
டிரைவர் ஜமுனா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

டிரைவர் ஜமுனா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' படப் புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலைப் பயணத்தை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமை...
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷும் நடிகை அஞ்சு குரியனும் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்குப் பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா கா பா ஆனந்த், பக்ஸ், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, KPY பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்திருக்...
‘தெய்வ மச்சான்’ விமல்

‘தெய்வ மச்சான்’ விமல்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'தெய்வ மச்சான்' என பெயரிடப்பட்டுள்ளது. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்த...
சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ்

சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக 'சாணிக்காயிதம்' திரைப்படம் உருவாகியுள்ளது. தலைமுறை தலைமுறையாக அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில் சிக்கித் தவிக்கும் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் பழிவாங்கும் க்ரைம் த்ரில்லரில் நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ், "இனிமையாகவும் வசீகரமாகவும் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்த எனக்கு, பொன்னி கதாபாத்திரத்திற்காக மிகவும் முரட்டுத்தனமான, ரத்தம் சதையும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் கூறினர். அது போக இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒல்லியாக வேண்டும் எனக் கூறினர். முன் தயாரிப்பு விஷயத்தில் உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் அந்த உடையை அணிந்து கொண்டு, அந்த மேக்கப்பை போட்டுக் கொண்...
பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’

பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’

சினிமா, திரைத் துளி
நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் 'தடை உடை' என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் 'தடை உடை' படத்தை முத்ராஸ் பிலிம் பேக்ட...
பயணிகள் கவனிக்கவும் – எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை

பயணிகள் கவனிக்கவும் – எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை

சினிமா, திரைத் துளி
'பயணிகள் கவனிக்கவும்' படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா, இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசைச் சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993...
‘ஓ மை டாக்’ திரைப்படம் | ஜான்டி ரோட்ஸ்

‘ஓ மை டாக்’ திரைப்படம் | ஜான்டி ரோட்ஸ்

சினிமா, திரைத் துளி
ஏப்ரல் 21 வியாழனன்று, தென்னாஃப்ரிக்கக் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் நடிகர் சூர்யாவுக்கு ஒரு ட்வீட் செய்தார். அதில் "ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார். அதில், “மிக்க நன்றி! நான் ஜான்டி ரோட்ஸ் உடைய பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார். https://twitter.com/JontyRhodes8/status/1516742916894445568?t=2sC22H8g5w9YF28haWpTsQ&s=19 மகேந்திரன், "#OhMyDog இந்த திரைப்படத்தில் #அர்னவ்விஜய் நடிப்பைப் பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களை ஒன்றாகப் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. @arunvijayno1 அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ...
ஆஹா தமிழில் ஜீ.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’

ஆஹா தமிழில் ஜீ.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’

சமூகம், சினிமா, திரைச் செய்தி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கலந்து கொண்டார். ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியான செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ஐங்கரன் படத்தின் ட்ரெய்லரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இப்படம், மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர், “உங்களின் இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. நான் திரைத்துறைக்கு...
காத்து வாக்குல ரெண்டு காதல் – ரொமான்டிக் காமெடிப் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் – ரொமான்டிக் காமெடிப் படம்

Trailer, காணொளிகள், சினிமா
தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் ரொமான்டிக் காமெடி ஜானரான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தென்னிந்தியத் திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான ‘டூ டூடூ டூ டூடூ’ பாடல், ‘ரெண்டு காதல்’, ‘நான் பிழை’ போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதைக் கவர்ந்த பாடலாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர் இணையமெங்கும் பரவலான வரவேற்...
சாணிக்காயிதம் – பொன்னியின் பழிவாங்கும் படலம்

சாணிக்காயிதம் – பொன்னியின் பழிவாங்கும் படலம்

Teaser, காணொளிகள், சினிமா
சாணிக்காயிதம் படம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். பொன்னி மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத் தொடங்கும்போது, ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார். இதனைச் சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியாக கீர்த்தி சுரேஷும், சங்கையாவாக செல்வராகவனும் நடித்துள்ளனர். தெலுங்கில், சின்னி (Chinni) என்ற பெயரிலும், மலையாளத்தில் சாணிக்காயிதம் என்ற பெயரிலும் ஒளி...
KGFஇன் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்கும் சுதா கொங்கரா

KGFஇன் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்கும் சுதா கொங்கரா

சினிமா, திரைத் துளி
மிகத் தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களைத் தந்து கொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பேல் பிலிம்ஸ். பிரபாஸின் சலார் உட்பட, சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. சூரரைப் போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு இத்திரைப்படத்தைத் துவங்கவிருக்கிறார்....