Shadow

Tag: யுவராஜ்

குமரி மாவட்டத்தின் ‘தக்ஸ் (THUGS)’ – பிருந்தா மாஸ்டர்

குமரி மாவட்டத்தின் ‘தக்ஸ் (THUGS)’ – பிருந்தா மாஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடன இயக்குநராகத் திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு 'தக்ஸ் (THUGS)' எனப் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், திரையுலக வணிகத்தைத் துல்லியமாக அவதானிக்கும் நிபுணர்களான பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெய்மெண்ட்டைச் சேர்ந்த தரண் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர். 'தக்ஸ் (THUGS)' என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தைக் களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா மாஸ்டர். கதைக்கு ஏற்ற வகையில் நடிகர்களையும் அவரே நேரடியாக தேர்வு செய்தி...
மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

சினிமா, திரைச் செய்தி
டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் (Double Meaning Production) சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்” ஆகும். புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பரவலான கவனத்தை ஈர்த்தது. ராமாபுரம் SRM கல்லூரியில், படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் விஷ்ணு சிலை வைக்கப்பட்டு ரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவினில் இந்த ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நம் பாரம்பரிய கல...
மாயோன் | கமலின் கடவுள் குறித்த கேள்விக்குப் பதில்

மாயோன் | கமலின் கடவுள் குறித்த கேள்விக்குப் பதில்

சினிமா, திரைத் துளி
பதினான்கு வருடங்களுக்குப் பிறகு, ‘கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்’ என தசாவதாரத்தில் கமல் பேசிய வசனத்திற்குப் பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ். ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாயோன்”. படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்குப் பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.இந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அ...
கூகுள் குட்டப்பா | ஆஹா டிஜிட்டலுடன் கைகோர்த்த பூர்விகா மொபைல்ஸ்

கூகுள் குட்டப்பா | ஆஹா டிஜிட்டலுடன் கைகோர்த்த பூர்விகா மொபைல்ஸ்

சினிமா, திரைத் துளி
தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3 ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்தியேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்தத் திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று வெளியாகிறது. தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் விற்பனை நிறுவனமான ‘பூர்விகா’ ஆஹா டிஜிட்டல் தளத்துடன் கரம் கோர்த்து, தனது கோடம்பாக்கம் கிளை அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் முன்னிலையில் ‘கூகுள் குட்டப்பா’ படக்குழுவினருடன் பிரத்தியேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பூர்விகாவின் வணிக பொது செயலாளர் திரு. சிவக்குமார், ஆஹா டிஜிட்டல் தம...
வாய்தா விமர்சனம்

வாய்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மொபைலில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டு வரும் ஒவரைத் தவிர்க்க, எதிரே பைக் ஓட்டி வரும் இளைஞன், சாலையில் அமர்ந்திருக்கும் முதியவர் அப்புசாமி மீது ஒரு அவ்விளைஞன் பைக்கால் மோதி விடுகிறான். அவரது வலது கையில் தீக்காயத்துடன் எலும்பு முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு செல்கிறது. பாதிக்கப்பட்ட அப்பாசாமி, தனக்கு காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்க, நீதிமன்றமோ ஒரு வினோதமான தீர்ப்பை அளிக்கிறது. சாதிய ஏற்றதாழ்வு, சாதியப் பெருமிதம், ஓர் ஜாதிக்குள் நடக்கும் போட்டி பொறாமை சண்டைகள், அதை மறந்து அவர்கள் இணையும் புள்ளிகள் என படம் பேசும் அரசியல் நுண்ணியமாய் உள்ளது. நீதி இயங்கும் லட்சணம் அடிவயிற்றில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. முதியவர் அப்புசாமியாக மு.ராமசாமி நடித்துள்ளார். கதையோடு இயல்பாய்ப் பொருந்தும் பாத்திரமாக வருகிறார். ஊரில் ஆதிக்க சாதியினருக்குப் பயந்து அடிபணிவதாகட்டும், தனக்க...
இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யா 41

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யா 41

சினிமா, திரைத் துளி
அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://twitter.com/Suriya_offl/status/1529742532791238657?s=20&t=0VRPPjoh8KUtaJS8KluL3A தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான ‘நந்தா’, ‘பிதாமகன்’ என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைக் குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களைப் பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலைத் தூண்டியத...
மாலை நேர மல்லிப்பூ – ஒரு பாலியல் தொழிலாளியின் பாசக்கதை

மாலை நேர மல்லிப்பூ – ஒரு பாலியல் தொழிலாளியின் பாசக்கதை

சினிமா, திரைச் செய்தி
21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாகப் பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சும...
ஆர்.கே.சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

ஆர்.கே.சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

சினிமா, திரைத் துளி
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' எனப் பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி முக்கியமான வேடத்தில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப்பயிற்சியை ...
விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சினிமா, திரைத் துளி
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தோன்றுகின்றனர். இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'குஷி' உற்சாகமான வண்ணமயமான காதல் கதையாக இருக்கும் என்பதையும், இந்த முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்த...
“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன்

“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன்

சினிமா, திரைச் செய்தி
அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார். ‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆர்ப்பாட்டமாக இக்குழுவினரை வரவேற்ற நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரிக் காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் க...
ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’

ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’

OTT, Web Series, சினிமா, திரைத் துளி
மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதளத் தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் யூட்யூப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில்...
மேயாத மான் இயக்குநரின் ‘குலு குலு’

மேயாத மான் இயக்குநரின் ‘குலு குலு’

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திராவும், நமீதா கிருஷ்ணமூர்த்தியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், 'லொள்ளு சபா' சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சர்...
“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

சினிமா, திரைச் செய்தி
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்தியேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார். சாணிக்காயிதம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, 'மலர்ந்தும் மலராத..' என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரும், இ...
ஆதார் – எளிய மனிதர்களின் வலி

ஆதார் – எளிய மனிதர்களின் வலி

சினிமா, திரைத் துளி
 இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'யு/ஏ 'சான்றிதழைப் பெற்றுள்ளனர். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஆதார்'. 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்க...
சந்தோஷ் சிவனின் ‘சென்டிமீட்டர்’

சந்தோஷ் சிவனின் ‘சென்டிமீட்டர்’

சினிமா, திரைத் துளி
'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்தியேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இதில் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்தப்...