Shadow

Tag: ரஜினிகாந்த்

லால் சலாம் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே பிரச்சனையைத் தூண்டிவிடப் பார்க்கும் அரசியல்வாதிகள். இது தெரியாமல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எழும் போட்டியில் அடித்துக் கொள்ளும் இந்து, இஸ்லாம் விளையாட்டு வீரர்கள், இதற்கு மத்தியில் ஊரில் தடைபட்டுப் போன கோவில் திருவிழா, முறைத்துக் கொண்டு திரியும் இரு வேறு சமயத்தைச் சேர்ந்த நாயகர்களின் அப்பாக்கள் இருவரும் உயிர் தோழர்கள் இப்படியிருக்கும் ஒவ்வொரு ஒன்லைன் –களுக்கும் சினிமாத்தனமான முடிவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எழுதத் தெரியும் என்றால் அதுதான் ஒட்டு மொத்த லால் சலாம் திரைப்படம். தன் தந்தை மீது சங்கி என்னும் முத்திரை விழுவதை அவமானமாகக் கருதும் மகள் கிடைப்பது ஒரு கொடுப்பினை தான்.  அந்த முத்திரை அவமானகரமானது, என் தந்தை அப்படி இல்லை என்று சொல்லத் துடித்து இப்படி ஒரு திரைப்படத்தை மகள் ஐஸ்வர்யா ...
சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆவி...
“காந்தாரா: இந்திய சினிமாவின் மகத்தான படைப்பு” – ரஜினி புகழாரம்

“காந்தாரா: இந்திய சினிமாவின் மகத்தான படைப்பு” – ரஜினி புகழாரம்

சினிமா, திரைத் துளி
“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். 'கே.ஜி.எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15 ஆம் தேதியன்று தமிழகத் திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரி...
மேடையில் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோக்கள் – புதுப்பொலிவுடன்

மேடையில் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோக்கள் – புதுப்பொலிவுடன்

Songs, காணொளிகள், சினிமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மேடையில் தோன்றி பல பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். அதன் பின் சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு, ரசிக பெருமக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற நிறுவனமான NOISE AND GRAINS, அந்தப் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட முடிவு செய்து, இந்தப் பதிவுகளை நவீன டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில், ஒளி கலவை செய்து, அதற்கு அச்சாரமாய் முதல் பாடலாக, ரஜினிகாந்தின் மிக முக்கியமான வெற்றிப்படமான பாட்ஷா படத்தில் இருந்து "நான் ஆட்டோக்காரன்" பாடலுக்கு ரஜினிகாந்த் மேடையில் தோன்றி நடனம் ஆடும் காட்சித் தொகுப்புகளை, NOISE AND GRAINS யூடியூப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் விழாவில் நடனமாடிய பாடல்களும், பேசிய வசனங்களும் NOISE AND GRAINS யூடியூப் பக்கத்தில் வெளியிட...
தர்பார் விமர்சனம்

தர்பார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முருகதாஸ் இயக்கியிருந்தாலும், இது ரஜினி படமாக மட்டுமே உள்ளது. ரஜினி படம், ரஜினி படமாக இல்லாமல் இருந்தால்தான் ஏமாற்றமளிக்கும். ரஜினி எனர்ஜியாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார் திரையில். தர்பார் என்பது அரசவையைக் குறிக்கும். தனது தர்பாருக்கு உட்பட்ட மும்பையைக் காவல் பரிபாலனம் செய்யும் ஐபிஎஸ் அதிகாரியான ஆதித்யா அருணாச்சலத்தின் மகள் கொல்லப்படுகிறார். மரணத்தால் மிகுந்த மனச்சோர்வில் உழலுகிறார். யாரால் அவர் மகள் கொல்லப்பட்டார் என்று கண்டுபிடிப்பதும், எவ்வாறு தன் மகளின் மரணத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கினார் என்பதும்தான் படத்தின் கதை. இப்படத்திற்கு, என்கவுன்ட்டர் என்ற தலைப்பு தான் பொருத்தமாய் இருந்திருக்கும். என்கவுன்ட்டரை ஆதரிக்கும் ஆபத்தான போலீஸ் கருவைத் தொட்டுள்ளார் முருகதாஸ். லில்லி எனும் பாத்திரத்தில் நயன்தாரா தோன்றியுள்ளார். உண்மையில் இது நாயகியே தேவையில்லாத படம். நயன்தாரா வரும் காட்சிகள...
‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் "அந்த நாள்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், "அந்த நாள்" படம் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் S.P.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் R. ரகுநந்தன் தயாரிக்கிறார்....