Shadow

Tag: வசந்த் ரவி

வெப்பன் – சூப்பர் ஹ்யூமன் ஆக்‌ஷன் படம்

வெப்பன் – சூப்பர் ஹ்யூமன் ஆக்‌ஷன் படம்

சினிமா, திரைச் செய்தி
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் கோபி, “சூப்பர் ஹ்யூமன் கான்செப்ட்டோடு இந்தப் படம் வந்திருக்கிறது. வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாகப் படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில், அடுத்த கட்டத்திற்கான நகர்வாக வெப்பன் படமிருக்கும். வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார். இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்கக் கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாகப் பிரம்மாண்டமாக இருந்தது" என்றார். இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “விஜய...
’”பொன் ஒன்று கண்டேன்” பேமிலி ஆடியன்ஸுக்கான படம்’ – வசந்த் ரவி

’”பொன் ஒன்று கண்டேன்” பேமிலி ஆடியன்ஸுக்கான படம்’ – வசந்த் ரவி

சினிமா, திரைச் செய்தி
வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள். இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.”என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வ...
”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்றும...
அஸ்வின்ஸ் விமர்சனம்

அஸ்வின்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த உலகில் வரக்கூடிய ஒரு பிரச்சனையை வேறு ஒரு உலகில் சென்று தீர்க்க வேண்டும். அதற்கு இந்த உலகில் உயிர்விடவேண்டும். அப்போது தான் அந்த உலகில் உயிர்பெற முடியும். இப்படியான ஒரு சூழல் நாயகன் வசந்த் ரவிக்கு வருகிறது. இது படத்தின் பின்பாதியில் வரக்கூடிய கதை. அப்போ முன்பாதி கதை? லண்டனில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அப்பால் ஒரு பாழடைந்த மேன்சன் இருக்கிறது. அந்த மேன்சனுக்குள் பல அமானுஷ்யங்களும் கண்டுபிடிக்கப் படாத பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்த மேன்சனுக்குள் செல்கிறார்கள் வசந்த் ரவி டீம். காரணம்? ஒரு பிரபலமான யூட்யூப் தளத்திற்காக. சென்றவர்களுக்கு என்னானது என்பதே முன்பாதி கதை. முதலில் சொன்ன அந்த மறு உலகக் கதையே இவர்களின் மேன்சன் பிரவேசத்தால் தான் நிகழ்கிறது. ஒரு ஸ்கிரீன...
‘ராக்கி’ வசந்த் ரவி

‘ராக்கி’ வசந்த் ரவி

சினிமா, திரைத் துளி
"எனது சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில். ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வமிருந்தாலும் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. ஆனால், எனது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. 'எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய்' என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று அனுபம்கேர் நடிப்புப் பள்ளியில் பயிற்சி மேற்கொண்டேன். பின்பு ராஜீவ் மேனனிடமும் பணியாற்றினேன். ஆனால், பெற்றோர்கள் மருத்துவம் மட்டும் போதாது மருத்துவ மேற்படிப்பும் படிக்க வேண்டும் என்றதும், மருத்துவமே படித்தால் அந்தத் துறையிலிருந்து வரமுடியாது என்ற காரணத்தால் மருத்துவம் சார்ந்து ஹெல்த் கேர் மேனேஜ்மேண்ட் படித்தேன். பிறகு சென்னையில் ஒரு பிரபல ம...
தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இயக்குநர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிச்சுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ்க...
தரமணி விமர்சனம்

தரமணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தரமணி' எனும் தலைப்பை, ஓர் ஏரியா பெயராகவோ ஸ்டேஷன் பெயராகவோ கொள்ளாமல், சாதாரண மக்களையும் ஐ.டி. மக்களையும் இணைக்கும் காரிடாரின் குறியீடாகக் கொள்ளலாம். பொருளாதாரச் சுதந்திரமுள்ள பெண்ணின் நடவடிக்கைகள் அவளைச் சார்ந்து வாழத் தொடங்கும் ஆணுக்கு எந்தளவுக்குப் பாதுகாப்பாற்ற உணர்வை ஏற்படுத்துமெனப் படம் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. படிச்ச முண்டை, தேவிடியா, பிட்ச் பிட்ச் பிட்ச், இங்க புழு பிடிச்சுடும் என இந்தப் படத்தில் வரும் வசனங்களுக்கு A செர்ட்டிஃபிகேட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் தான் இயக்குநர் ராம் நியாகமாகக் கோபப்பட்டிருக்க வேண்டும். ஐ.டி.யில்/பி.பி.ஓ.வில் வேலை செய்பவர்களே இப்படித்தான் எனக் குறை கூறும் மனோபாவத்தை இயக்குநர் ராமால் தவிர்த்துக் கொள்ளவே முடியவில்லை. நடனத்தில் விருப்பமுள்ள மனைவி வேறொருவருடன் நடனமாடுவதைப் பெரிய விஷயமாகக் கருதாத கணவனை எள்ளி நகையாடுகிறார் ராம். கார்ப்ரெட் கலாச்சாரமே...