Shadow

Tag: இயக்குநர் பாலாஜி தரணிதரன்

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படம்

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படம்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’ ஆகும். இப்படத்தை, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ப்ரொடக்ஷன் (Cine 1 Studios Production) இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கெனவே இருவரது கூட்டணியில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. வி...
“வெளிப்படையான விவாதத்தை வைக்கும் படம்” – வினீத் | காதல் என்பது பொதுவுடைமை

“வெளிப்படையான விவாதத்தை வைக்கும் படம்” – வினீத் | காதல் என்பது பொதுவுடைமை

சினிமா, திரைச் செய்தி
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், "படம் பார்த்ததும், படக்குழுவின் மீது ரொம்ப மரியாதை வந்துச்சு. ஒரு விஷயத்தை எடுத்து எவ்ளோ பொறுப்புணர்ச்சியோட பண்ண முடியுமோ அவ்ளோ கரெக்டா பண்ணியிருக்காங்க. அதே சமயம் ஆடியன்ஸ்க்குத் தேவைப்படுற சுவாரியசமும் படத்தில் இருந்தது. படம் முடியும் வரையிலுமே நான் என்ஜாய் பண்ணேன். நான் பார்த்தப்போ, க்வியர் கம்யூனிட்டியில் இருந்து நிறைய பெண்கள் வந்திருந்தாங்க. ரொம்...
மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா
என்றென்றும் புதுமை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ‘காதல்’ தான். அதாவது, காதல் என்றுமே நவீனமும் ஆகாது, பழைமையானதாகவும் மாறாது. ‘மாடர்ன் லவ்’ என்பதை, மாறி வரும் நவீன யுகத்தில், காதல் என்பது என்னவாக உள்ளது, எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககாலம் முதலே, காதலெனும் சொல்லை அகவயமான உணர்வாகவே பார்த்துப் போற்றியுள்ளனர் தமிழர்கள். போன நூற்றாண்டின் மத்தியில், அது ‘லவ்’வாக மாறியதில் இருந்து, அவ்வுணர்வு அகத்திலிருந்து புறத்திற்கு மெல்ல கசியத் தொடங்கி, இப்பொழுது புறவயமான அம்சமாகவே பெரும்பாலும் மாறிவிட்டது. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ படம். போகியுடன் ‘சிச்சுவேஷன்ஷிப் (Situationship)’-இல் இருக்கும் சாம் எனும் பெண், கே எனும் ஆணுடன் சிச்சுவேஷன்ஷிப்பில் இணைகிறார். பார்க்கும் கணத்தில், கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல்...
சீதக்காதி விமர்சனம்

சீதக்காதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் மேடை நாடகக் கலைஞன், சுமார் 25 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய பார்வையாளர்கள் முன் சுருங்கி விடுகிறான். அரங்கத்திற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதல் காரணமாகத் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார் ஐயா ஆதிமூலம். தனது பேரனுக்கான மருத்துவச் செலவினைப் பற்றிய பரிதவிப்போடு, சுஜாதாவின் 'ஊஞ்சல்' நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அமரராகிறார் ஐயா ஆதிமூலம். ஐம்பது ஆண்டு காலம் நடிப்பிற்காக மட்டும் வாழ்ந்த ஐயா, அவரது மறைவிற்குப் பின்னும் நடிப்பின் மேலுள்ள காதலால், யார் மூலமாகவாது நடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவரது பேரனின் மருத்துவச் செலவுக்கும், அவரது நாடகக் குழுவுக்கும் பணம் கிடைக்கிறது. ஆக, ஐயா ஆதிமூலம் செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி போல், தன் குடும்பத்தினருக்கும் நாடகக் குழுவிற்கும...
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல், பாடல், வில்லன், சண்டை, ரத்தம், குத்து வசனங்கள், நகைச்சுவைக்கு தனி நடிகர், அம்மா/தங்கச்சி சென்ட்டிமென்ட், லூசுத்தனமான கதாநாயகி, பழி வாங்குதல், தியாகம் செய்தல், தர்மத்தை காத்தல், அநியாயத்தை அழித்தல், மெஸ்சேஜ் மற்றும் மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்தல் என்று எதுவுமில்லாத ஒரு படம். அதுவும் தமிழ்ப்படம்.   அடுத்த நாள் தனக்கு திருமணம் என்பதை மறந்து விடுகிறான் ப்ரேம். ஏன் மறந்தான்.. திருமணம் நடந்ததா.. என்பதற்கு எல்லாம் பதில் திரையில்.   தற்காலிகமாக நினைவிழுக்கும் ப்ரேமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். செப்டம்பரில் சுந்தர பாண்டியன், அக்டோபரில் பீட்சா, நவம்பரில் நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் என இந்த வருடத்தின் முடிவு அவருக்கு நிறைவாய் அமைந்துள்ளது. இரண்டு தேசிய விருதுகள் பெற்ற 'தென்மேற்கு பருவக் காற்று' என்னும் படத்தில்  நா...