
பூக்கி விமர்சனம் | Pookie review
பூக்கி என்றால் Gen Z அகராதியில், honey, darling, babe, என்னவன், என்னவள் எனப் பொருள்படும் வகையில், ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தையும் அணுக்கத்தையும் வெளிப்படுத்தும் செல்லம் கொஞ்சிக் கொள்ளும் சொல்லாம். அந்த மேஜிக் சொல்லிற்குள், Gen Z தலைமுறையினர், ஒட்டுமொத்த காதலையும் அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர்.
தனது பொருளாதார நிலையைப் பற்றி யாரேனும் பேசினால் தாழ்வு மனப்பான்மை எழுந்து முன்கோபம் கொள்ளும் கைலாஷை பிரேக்-அப் செய்கிறாள் ஆழி. பிரேக்-அப்பிற்குப் பின்னான அக்காதலர்களது மனநிலையே படத்தின் கதை.
படம் தொடங்கிய முதல் ஃப்ரேமிலேயே கதையும் தொடங்கி விடுகிறது. ஒரு சிம்பிளான கதையாகத் தோன்றினாலும், மையப் பாத்திரங்களின் மன ஓட்டத்தோடு, சமூகத்தின் நிலையையும் முன்வைக்கிறது படம். உதாரணத்திற்கு எத்தனை வகையான ரிலேஷன்ஷிப்கள் உள்ளன என்பதையும், Dating App-கள் இயங்கும் விதத்தைப் பற்றியும் எப்படி சுவாரசியமாகச்...






