Shadow

Tag: சாய் தீனா

காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்

காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வடசென்னையில் ஜிம் வைத்திருக்கும் ஜீவா, மேகாவை உருகி உருகிக் காதலிக்கிறார். அப்பகுதி இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் போது, ரத்னா அவர்கள் கையில் கத்தியைக் கொடுத்துச் சீரழிக்கிறான். அதனால் கோபமுறும் ஜீவா, 'மாஸ்' எனும் அடைமொழியுடன் ரத்னாவை எதிர்க்கிறான். மோதல் முற்றும் தருவாயில் ஜீவாவின் காதலை நிரந்தரமாக இழக்கிறாள் மேகா. ஆனால், காற்று வாக்கில் காதலை இழந்தாலும், நூதனமான முறையில் மீண்டும் ஜீவாவுடனே இணைகிறார் மேகா. படத்தின் சண்டை இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் சூப்பர் சுப்புராயனுக்கு, இது திரையுலகில் 50 ஆவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டெரரான ரோலில் தோன்றி, அதே வேகத்தில் மறைகிறார். படத்தின் முதற்பாதியின் சிக்கலும் அதுதான். கத்தியுடன் ஏகப்பட்டு பேர் குறுக்கமருக்க ஓடிக் கொண்டே உள்ளனர். கழுத்து அறுபட்டு இறக்கின்றனர். கதை நிகழும் களத்தின் சூழலையும் பிரச்சனையையும் அழுத்தமாகப் பதிவ...
மாயக்கூத்து விமர்சனம் | Maayakoothu review

மாயக்கூத்து விமர்சனம் | Maayakoothu review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளனான வாசன், அவனது காதாபாத்திரங்கள் உலவும் உலகில் சிக்கிக் கொள்கிறான். தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் எனக் கோபத்தில் இருக்கும் கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளன் எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் முடிவு. எழுத்தாளனுக்குள் நடக்கும் விசாரமாக இந்தக் கதை நகர்கிறது. ‘சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்வதுதான் இந்தப் படத்தின் பின்னுள்ள ஐடியா’ என்றார் படத்தின் இயக்குநர் A.R.ராகவேந்திரா. படத்தின் ஒரு வரிக்கதை மாற்று சினிமாவிற்கான களம் போல் தொனித்தாலும், கலகலப்பிற்கு உதவியுள்ளது திரைக்கதை. தான் படைத்த உலகில் தானே சிக்கிக் கொண்டு படாதபாடுபடுகிறார் வாசன். மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார் வாசன். முதல் தொடரி...
“தீனா குழந்தை மாதிரி” – அமீர் | மாயவலை

“தீனா குழந்தை மாதிரி” – அமீர் | மாயவலை

சினிமா, திரைச் செய்தி
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'மாயவலை' ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள 'மாயவலை' திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திர...
திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர். படத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் விஜய் ஆண்டனியின் தம்பி. தனது தம்பி தான் அந்தக் கொலையைச் செய்தான் என்றும், மேலும் எட்டுக் கொலைகளைச் செய்துள்ளான் என்றும், அடுத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், ஒரு குழந்தையும் கொலை செய்ய உள்ளான் எனத் தெரிய வருகிறது விஜய் ஆண்டனிக்கு. நீதி, நேர்மை தவறாத நல்லவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் உத்தமரான எஸ்.ஐ. முருகவேல்...