Shadow

Tag: ஜோஜு ஜார்ஜ்

தக் லைஃப் விமர்சனம் | Thug Life review

தக் லைஃப் விமர்சனம் | Thug Life review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காவலர்களிடமிருந்து உயிருடன் தப்பிக்க ரங்கராய சக்திவேல் அமரனைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு நன்றிக்கடனாக அமரனைத் தனது மகன் போல் வளர்க்கிறார். அமரன் பெரியவன் ஆனதும், சக்திவேல் தப்பிப்பதற்காக வேண்டுமென்றே தனது தந்தையைத் கொன்றதாக அறிந்து கொள்கிறான் அமரன். அமரன், சுடப்பட்ட சக்திவேலை நேபாளத்தின் பனிப் பள்ளத்தாக்குகளில் தள்ளிவிடுகிறான். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பும் அஞ்சானான சக்திவேல் ரங்கராயன் துரோகிகளைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. காட்சிப்படுத்தியதிலிருந்த அதீத தொழில்நுட்ப மெனக்கெடல், திரைக்கதை அமைத்ததில் சுத்தமாக இல்லை. கதை என்ற வஸ்து உணர்ச்சிகரமான திரைக்கதையாக மாறாமல், வசன நகர்வுகளாக உள்ளன. கதையில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கவேண்டிய அனைத்துப் புள்ளிகளும் வசனங்களாகச் சொல்லப்படுகின்றன. நாசர் சொல்லும் ஒரு வசனம், கமலுக்கு எதிராகத் திரும்ப சிலம்பர...
ரெட்ரோ விமர்சனம் | Retro review

ரெட்ரோ விமர்சனம் | Retro review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும். தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் இருந்து எப்படியேனும் அவன் மறைக்கும் தங்கமீன் ரகசியத்தை அறியத் துடிக்கிறார் பாரியின் வளர்ப்புத் தந்தை. இது படத்தின் முதற்பாதி. பாரியைச் சிறையில் இருந்து மீட்டு, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டியில் பங்கு பெற வைக்க முயல்கிறது ஒரு குழு. ஆனால் பாரியோ அக்...
கஜராஜ் 100 – பீட்சா டூ ரெட்ரோ | RETRO

கஜராஜ் 100 – பீட்சா டூ ரெட்ரோ | RETRO

சினிமா, திரைச் செய்தி
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கி...
இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்

இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள "இரட்டா" படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களைக் கொண்டுள்ளது இந்த த்ரில்லர் படம். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு, இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தமிழ் - மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்குச் சொந்தமான 'அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ்', மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.ஏற்கெனவே மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜஜின் கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. பல படங்களில், போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக அ...
மதுரம் விமர்சனம்

மதுரம் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது. கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், எப்படி மருத்துவமனை ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று விவரிப்பார். மருத்துவமனையின் பரபரப்பு மெல்ல அடங்கி, ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் க்யூட்டான ஷாட்களில், மருத்துவமனையின் அழகு மிளிரத் தொடங்குகிறது. மலையாளப் படங்களுக்கே உரிய பிரத்தியேக அழகுகளில் ஒன்று, உணவினையும், அது சமைக்கப்படும் நேர்த்தியையும் மிக அற்புதமான ஷாட்களில் ...
ஜோசஃப் – விமர்சனம்

ஜோசஃப் – விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படம், கடந்த நான்கைந்து வருடங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் இரண்டு லேயர்கள் உள்ளன. ஒன்று க்ரைம் இன்வெஸ்டிகேஷன். மற்றொன்று மிக எமோஷனலான குடும்ப உறவுகள் மீதான சென்ட்டிமென்ட். இரண்டையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது ஜோசஃப். ஜோசஃப், ரிடையர்ட் போலீஸ் அதிகாரி. அவரது இன்வெஸ்டிகேஷன் திறமைக்காக அவரைத் தொடந்து போலீஸ் டிபார்ட்மென்ட் பயன்படுத்தி வருகிறது. முதல் காட்சியில் மிக அநாயாசமாக அந்த வயதான தம்பதியர் கொலையில் கொலைகாரன் யார் என துப்பறியும் காட்சியும் அதற்கான லாஜிக்கும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஜோஃசப்க்கு ஒரு தொந்தரவு செய்யும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அவர் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் சேருவதற்கு முன் அவரது ஊரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெண் வீட்டில், இவர் வேலை இல்லாதவர் என்பதால் இவருக்குப் பெண் தர மறுக்கிறார்கள்...