Shadow

Tag: மோகன்லால்

கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர். திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் சொத்தாக இருக்கும் வாயுலிங்கத்தையும் மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக்குகிறார். சிவன், பார்வதியாக அக்ஷய் குமாரும், காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். துவாபுர யுகத்தில், தவமியற்றும் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளிக்க வேடனாக வரும் கிராதமூர்த்தி (சிவன்) பாத்திரத்தில் மோகன்லால் வருகிறார்....
L2: எம்புரான் | Empuraan review

L2: எம்புரான் | Empuraan review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஸ்டீஃபன் நெடும்பள்ளி, P.K.ராமதாஸின் மஹன் ஜதின் ராமதாஸைக் கேரளாவின் முதல்வராக, இப்படத்தின் முதல் பாகமான லூசிஃபரில் நியமித்திருப்பார். ஐந்தாண்டுகளில் ஊழலில் திளைக்கும் ஜதின், தன்னைத் தற்காத்துக் கொள்ள வலதுசாரி தேசியக் கட்சியான ‘அகண்ட சக்தி மோர்ச்சா (ASM)’ உடன் கூட்டணி வைக்கிறார். கடவுளின் நாடான கேரளாவைக் காப்பாற்ற ஸ்டீஃபன் நெடும்பள்ளியை அழைக்கிறார் கோவர்தன் எனும் விசில்-ப்லோயர் (Whistle blower). தேவபுத்திரனிடம் இருந்தும், பஜ்ரங்கி பாபாவிடம் இருந்தும், தெய்வத்திண்ட தேசத்தைக் காப்பாற்ற சொர்க்கத்தில் இருந்து துரத்தப்படும் லூசிஃபர் எழுந்தருள்கிறார். லூசிஃபரின் வருகையை, தலைக்கீழாக விழும் சிலுவையின் (L) மூலமாகக் குறியீடாக உணர்த்திருப்பார்கள். மேலும், கேரளக்காட்டில் பிரியதர்ஷினியைக் காப்பாற்ற சாத்தான் தோன்றி விட்டான் என்பதை, மின்னல் தாக்கி எரியும் மரத்தின் கிளை முறிந்து L வடிவில் தீப்பற்றி அம்மரம் ...
L2: எம்புரான் | Anamorphic format 1:2.8

L2: எம்புரான் | Anamorphic format 1:2.8

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்கப் பல இடங்களில் படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலும், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகப் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.நடிகர் டோவினோ தாமஸ், “இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், ப்ரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவி...
பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ‘பரோஸ்’, திவரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர் பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். 'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் செய்துள்ளார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில் பேசிய வசனகர்த்தா ஆர் பி பாலா, “மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு ...
“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால்

“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால்

OTT
ஜீ5, மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வரலாற்றுப் படைப்பான ​​‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும் வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசீகரிக்கும் இந்தத் தொகுப்பின் ஒரு கதையில் தோன்றியுள்ள நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் எம்.டி.யின் மகள் அஸ்வதி V நாயர் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான வெளியீட்டு நிகழ்வு, கோலாகலமாக நடைபெற்றது.மனோரதங்கள் படத்தின் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ள வாசுதேவன் நாயர் மகள், அஸ்வதி V நாயர் எம்.டி.யின் கடிதத்தைப் படித்துக் காட்டினார். அதில், வாசுதேவன் நாயர், தன்னுடன் மனோரதங்களில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.கடவுளின் சொந்த நாடான கேரளாவின் பசுமையான பின்...
”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.

”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா,  போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” மிகப்பிரமாண்டமான  ஆக்சன் மற்றும் VFX  காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக, 2024ல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக  தற்போது ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.ஆஸ்கர் விருதுகளை வென்ற Moonlight (2016), Three Billboards Outside Ebbing மற்றும் Missouri (2017)  போன்ற பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்ததோடு, ஹாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் நிக் துர்லோவ்.ஹாலிவுட் பிரபலமான நிக் துர்லோவ் இணைந்திருப்பதால், விருஷபா படத்தின் தரம் இந்திய அளவை த...
Bro Daddy விமர்சனம்

Bro Daddy விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பொச்சடிப்பை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும். மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது. லூசிபர் படைப்பு எப்படி பிருதிவிராஜ் சுகுமாரனை ஒரு அற்புதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தியதோ, அதற்கு நேர் மாறான கும்மாளம் கொட்டும் இன்னொரு பிரிவிலும் கூடத் தன்னால் சாதிக்க முடியும் என்று இங்கே நிரூபித்திருக்கிறார். அண்மையில் "சாய் வித் சித்ரா" பேட்டியில் இயக்குநர் ராதாமோகன் பிருதிவிராஜ் தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு வலுவான சினிமா ந...
காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர். தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான 'இத்திக்கர பக்கி', கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்கு...
“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா

“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா

சினிமா, திரைத் துளி
தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை நமீதா, தனது ரீ-என்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்குத் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் . ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”. நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாளத் திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ-என்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் உள்ளார் நமீதா. புலிமுருகனில் நடித்த அனுபவத்தைக் குறித்து, “கடந்த ஆண்டு ரீ-என்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்தப் படத்தின் இயக்குநரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்ச்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமான...
நமது விமர்சனம்

நமது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நாம் அனைவரும்’ எனப் பொருள்படும் “மனமன்த்தா” என்ற தெலுங்கு படத்தை ‘நமது’ என தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அபிராம்க்கு ஐரா மீது காதல்; சிறுமி மஹிதாவிற்கு சாலையில் வாழும் குட்டி பையன் வீர் மீது பாசம்; காயத்திரிக்கு தன் குடும்பத்தின் மீது அலாதி அன்பு; சாய்ராம்க்கு குடும்பச் சூழலைச் சமாளிக்க மேனேஜராக பிரமோஷன் வேண்டும். இந்த நான்கு கதைகளின் திரட்டுதான் ‘நமது’ படமாக நீள்கிறது. வெவ்வேறு சூழலை எதிர்கொள்ளும் நான்கு நபர்கள்; நான்கு கதைகள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏற்படும் நான்கு சங்கடங்கள் என நல்லதொரு ஃபீல் குட் மூவிக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி. அபிராமாக விஸ்வாந்த் நடித்துள்ளார். காதலில் விழும் நன்றாகப் படிக்கும் மாணவன் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனாலும், அவரது முகத்தில் தெரியும் அந்நியத்தன்மை காரணமாக மனதில் பதிய மறுக்கிறார். ஐராவாக அனிஷா நடித்...
உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னைப்போல் ஒருவன்" என்பது உலக நாயகன் கமல் அவர்களின் படம் என்று நினைத்தால் அது பாதி தான் உண்மை. ஒரு நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த கமல் எடுத்த முயற்சி என்பது தான் மீதி பாதி உண்மை. இப்படத்தின் ஆதாரமான பாலிவுட்டின் "வெட்னஸ்டே" படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கித் தமிழுக்கு ஏற்றாற்போல் சின்னஞ்சிறு மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். கொடுக்கும் பணத்திற்கு நல்ல தக்காளியாக வாங்க வேண்டும் என்று கவலைப்படுபவன் சாதாரண மனிதன். எது நடந்தாலும் தனக்கேன் வம்பு என முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசையில் செல்லும் அந்த சாமானிய மனிதன், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து மனம் நொந்து, தன்னால் முடிந்த பதில் நடவடிக்கை எடுக்க தீவிரம் காண்பித்தால் என்னாகும் என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. 'சி4' என அழைக்கப்படும் செக்கோஸ்லோவக்கியன் ப்ளாஸ்டிக் குண்டுகளை சென்னையில் ஆறு இடத்தில் வைக...