ஜிகிரி தோஸ்த் விமர்சனம்
மூன்று நண்பர்கள். அதில் ஒருவன் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவன், மற்றொருவன் தீவிரவாதிகளின் செல்ஃபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் சாதனம் ஒன்றைத் தன் கல்லூரி ப்ராஜெக்ட் ஆகச் செய்துவிட்டு, அது செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் போனதை எண்ணி நொந்து போய் இருப்பவன். இவர்களுக்கு உதவிக் கொண்டு ஜாலியாகச் சுற்றித் திரியும் மற்றொருவன். இவர்கள், ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்திக் கொண்டு செல்வதைப் பார்க்கிறார்கள். மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா, யூகிக்க முடிந்தால் அது தான் ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை.
மிக எளிமையான கதை, அதைவிட எளிமையான திரைக்கதை என ஒரு அடிப்படையான சினிமா தான் ஜிகிரி தோஸ்த். அது தவிர்த்து அதை ஆழமாக அலசிப் பார்ப்பதற்கு வேறொன்றும் இல்லை.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு நேர்த்தியாக எடுக்க முடியுமோ அவ்வளவு நேர்த்தியாகப் படத்தை எடுத்திருக்...